முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

kitchen cleaning tips : நம்மில் பல கிச்சனில் வீடும் துர்நாற்றத்தை எப்படி விரட்டுவது என தெரியாமல் தவிப்போம். இந்த பிரச்சனைக்கான எளிய உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • 17

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    மசாலா டப்பா முதல் அன்றைய தினம் வைக்கும் உணவின் வாசனை வரை பல விதமான வாசனைகளை கொண்டது சமையலறை. என்ன தான் கிச்சனை நாம் சுத்தமாக வைத்தாலும் சில சமயங்களில் நம்மை அறியாமல் துர்நாற்றம் வீசத்துவங்கும். எப்படி?... எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை நம்மால் கண்டறியவே முடியாது. அந்த துர்நாற்றம் நம்மை மட்டும் அல்ல வீட்டில் உள்ளவர்களையும் சிரமப்பட வைக்கும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான எளிமையான உதவிக்குறிப்புகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்லலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    கிச்சனை எப்பவும் நறுமணத்துடன் வைக்க என்ன செய்யணும்? : ஒரு பேப்பர் அல்லது துணியில் கற்பூரத்தை வைத்து மடித்து அதை கிச்சனின் வெவ்வேறு மூலைகளில் வைக்கவும். இப்படி செய்வதால் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை விரட்டலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை கற்பூரத்தை மாற்றவும்.

    MORE
    GALLERIES

  • 37

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    எசன்ஷியல் ஆயில் : கிச்சனில் துர்நாற்றம் வீசுவதாக நீங்கள் உணர்ந்தால், முதலில் கிச்சனை சுத்தமாக துடைக்கவும். இதையடுத்து, ஒரு பஞ்சில் எடுத்து, அதை எசன்ஷியல் ஆயிலில் நனைத்து கிட்சன் மூலைகளில் வைக்கவும். இப்படி செய்வதாலும் கிட்சன் துர்நாற்றத்தை மாற்றலாம். 2 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சை மாற்றவும்.

    MORE
    GALLERIES

  • 47

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    பேக்கிங் சோடாவை : கிட்சன் அதிக துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்தால், 1 முதல் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கவும். இதை, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கிச்சன் முழுவதும் ஸ்ப்ரே செய்யவும். இப்படி செய்வதன் மூலம் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை இயற்கையான தடுக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 57

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    வாசை நிறைந்த பூக்கள் : உங்க வீட்டு கிட்சன் எப்பவும் வாசனையாக இருக்க, கிச்சனில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை நிறைந்த பூக்களை நிரப்பவும். பூக்களில் இருந்து வரும் வாசனை கிச்சனை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மல்லிகை, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூக்களை இதற்கு பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    எலுமிச்சை தோல் : நாம் வேண்டாம் என தூக்கி எரியும் சில பொருட்கள் நமது கிச்சனை வாசனையாக வைத்திருக்க உதவும். நாம் தூக்கி எரியும் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இலவங்கப்பட்டை தூளை அதில் சேர்க்கவும். நீர் ஆறியதும் அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அந்த கிட்சன் முழுவது ஸ்ப்ரே செய்தால் கிட்சன் நறுமணத்துடன் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 77

    உங்க வீட்டு கிச்சனை பளிச்செனவும் வாசனையுடனும் வைத்திருக இதை செய்யுங்க!

    எலுமிச்சை பழம் : சில சமயங்களில் கிச்சன் மேடை அல்லது காய்கறி வெட்டும் பலகையில் இருந்தும் துர்நாற்றம் வீசும். இதை தவிர்க்க, எலுமிச்சையில் உப்பை தடவி அதை கிச்சன் முழுவது தேய்க்க வேண்டும். இதனால், கிச்சனில் வரும் துர்நாற்றம் நீங்கும். வெள்ளை வினிகரையும் தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளிக்கலாம்.

    MORE
    GALLERIES