குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமான விஷயம். அதே சமயம் அடர்ந்த மூடுபனி மற்றும் மேக மூட்டத்தால் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனால் ஆடைகளை துவைத்து காய வைத்தாலும் ஈரம் சட்டென காயாமல் துர்நாற்றம் வீசும். குறிப்பாக அப்பார்ட்மெண்ட் போன்ற இடங்களில் வீட்டுக்குள் அல்லது பால்கனியில் காய வைப்பதாக இருந்தால் ஈரத்தை உலர்த்துவது கடினம். ஈரமான ஆடைகளுடன், வீட்டிலும் துர்நாற்றம் வீசத் தொடங்கும். அணியும்போது துர்நாற்றம் இருக்கும். எனவே இந்த பிரச்சனையை சமாளிக்க சில ஸ்மார்டான விஷயங்களை கையாளுவது அவசியம். எனவே குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவதற்கான சில எளிய குறிப்புகளை அறிந்து கொள்வோம்.
சரியான இடத்தில் உலர் ஆடைகள் : குளிர்காலத்தில், மக்கள் பெரும்பாலும் ஈரமான ஆடைகளை வீட்டின் உள்ளேயே மேசை, நாற்காலிகள் மீது காய வைக்கிறார்கள். ஆனால் துணிகளை உலர்த்துவதற்கு கயிறு கட்டி காய வைப்பதே சிறந்தது. இதன் காரணமாக, வெளிப்புறக் காற்று ஆடைகளை உலர்த்த உதவும். இதனால் துணி துர்நாற்றமின்றி உடனே காயும்.