பெரும்பாலும், வீட்டைச் சுத்தம் செய்யும் போது, ஃபர்னிச்சர்கள், தரை, திரைச்சீலைகள், டேபிள் போன்றவற்றை மட்டுமே சுத்தம் செய்கிறோம். ஆனால் நம்மை எப்போதும் அழகாகக் காட்டும் கண்ணாடியை ஏனோ மறந்து விடுகிறோம். ஒருவேளை ஞாபகம் வந்து சுத்தம் செய்தாலும், கண்ணாடியில் உள்ள கறைகள் முழுமையாக மறைவதில்லை. கறை படிந்த கண்ணாடியால், முகமும் தெளிவாக தெரிவதில்லை.
டால்கம் பவுடர் அல்லது விபூதி பயன்பாடு : டால்கம் பவுடர் அல்லது விபூதியை பயன்படுத்தி கண்ணாடியை ஒளிரச் செய்யலாம். கறையும் நீங்கிவிடும். கண்ணாடியில்டால்கம் பவுடர் அல்லது விபூதியை தூவி சிறிது நேரம் அப்படியே விடவும். பிறகு டஸ்டர் அல்லது பேப்பர் கொண்டு அதை தொடாமல் தேய்த்தால் கண்ணாடி பளபளப்பாக மாறுவதை காணலாம்.