சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாவிட்டால் சமைப்பது மிகவும் கடினம். ஏனெனில் இது சமைக்கும் போது உண்டாகும் புகையை வெளியிட உதவுகிறது. ஆனால் நாளாக ஆக சமையலறை எண்ணெய் பிசுக்கு, தூசி ஆகியவை ஃபேனில் ஒட்டிக்கொள்ளும். இதனால் ஃபேன் ஒழுங்காக சுற்றாது. அவ்வாறு சுற்றினாலும் சரியான முறையில் புகையை வெளியேற்றாது. காரணம் எண்ணெய் பிசுக்கு முழுவதும் ஃபேனில் ஒட்டி அடைத்துக்கொண்டிருக்கும். இதை சுத்தம் செய்வதும் பெரும்பாலோருக்கு கடினமாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு எளிதில் போகாது. இனியும் அந்த கவலை வேண்டாம். இந்த டிப்ஸ் கவனிங்க...
எக்ஸாஸ்ட் ஃபேனில் வடிகட்டிகள் இருந்தால், அவற்றை அகற்றிவிட்டு கொதிக்கும் நீரில் ஊற வைக்கவும். இந்த வடிகட்டிகளை சூடான நீர் மற்றும் அம்மோனியா 1/2 கப் கலந்து அந்த நீரில் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின் அதே கரைசலின் தண்ணீரை பயன்படுத்தி நன்கு தேய்க்கவும். ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்ய சோடியம் பாஸ்பேட்டை ஒரு கிளீனராக பயன்படுத்தலாம்.
ஃபேன் பிளேடுகளை சோப்பு மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். 1/4 கப் அம்மோனியா, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஊற வைக்கலாம். பிளேடை சுத்தம் செய்யும் போது ரப்பர் கையுறைகளை அணிய வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்ய பருத்தி துணியைப் பயன்படுத்தவும்.