பொதுவாக நம் இந்தியாவில் மின்விசிறிகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 3 பிளேடுகளைக் கொண்ட விசிறிகளைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில்.. அவை பெரும்பாலும் சந்தையில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒற்றை பிளேடுடன் மின்விசிறியைப் பார்த்தாலே... "காற்று வராது" என்று மனதில் நினைத்துக் கொள்கிறோம். 4 இறக்கைகள் கொண்டதை பார்த்தால்... "அட.. மின்சாரம் அதிகமா இருக்குமோ" என்று நினைக்கிறோம். இப்படித்தான் நமக்கு சந்தேகம் வருகிறது. அதனால் எத்தனை இறக்கைகள் கொண்ட மின்விசிறி சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒற்றை-பிளேடு : மின்விசிறியை பொருத்த வரையில், அதன் கத்திகள், அதன் வடிவமைப்பு, அதன் மோட்டார், அதிலிருந்து வெளிவரும் காற்று ஓட்ட விகிதம் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒற்றை பிளேடு கொண்ட விசிறிகளை பொதுவாக எல்லா இடங்களிலும் பார்க்க முடியாது. ஆனால் அவற்றில் ஒரு சிறப்பு உள்ளது. அவை குறிப்பாக ஒரே இடத்திற்கு காற்றை செலுத்துகின்றன. எனவே அவை தொழில்துறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
மூன்று-பிளேடு : மூன்று-பிளேடு விசிறிகள் வீட்டு உபயோகத்திற்கு மிகவும் பொருத்தமானது. பெரும்பாலான வீடுகளில் நம்மால் காணமுடியும். மூன்று பிளேடுகள் கொண்ட மின்விசிறிகள் எல்லாப் பக்கங்களுக்கும் சீரான காற்றைக் கொடுக்கின்றன. மின் உபயோகமும் குறைவாக உள்ளதால் வீடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மின்விசிறிகள் மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரியதாக இல்லாத அறைகளுக்கு ஏற்றது.
நான்கிற்கும் மேலான பெளேடுகளைக் கொண்ட மின்விசிறிகள் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் நான்கிற்கும் மேலாக பிளேடுகளைக் கொண்ட மின்விசிறியை வாங்க விரும்பினால் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். மொத்தத் தேவையைப் பொறுத்து எத்தனை மின்விசிறிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். பெரிய துடுப்புகளுக்கு மின்சாரம் அதிகமாகவும், சிறிய துடுப்புகளுக்கு குறைவாகவும் செலவாகும் என்று பலர் நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான். மின்விசிறியின் மோட்டாரைப் பொறுத்து, எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பது முடிவு செய்யப்படும். மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மின்விசிறியின் இறக்கைகளின் முனைகளில் சிறிது வளைவு இருக்க வேண்டும். வளைவு இல்லாவிட்டால்.. காற்று இறங்காது. எனவே.. மின்விசிறி இறக்கைகள்.. சேதமடையாமல்.. விரும்பியபடி வளைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிய மோட்டார்கள் மற்றும் குறைந்த RPM (ஒரு நிமிடத்திற்கான சுழற்சி) கொண்ட விசிறிகள் குறைந்த மின்னோட்டத்தைப் பயன்படுத்துகின்றன. அதிக காற்றோட்ட விகிதம் கொண்ட விசிறி அறையை வேகமாக குளிர்விக்கும். குளிர்விக்கும் போது மின்விசிறியின் பயன்பாடு குறைப்பதனாலும் மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். குறைந்த மின்னோட்டத்தைப் பயன்படுத்தும் மின்விசிறிகளை வாங்க அதற்கு ஆற்றல் நட்சத்திர மதிப்பீடு (Star Rating) உள்ளதா? என பார்த்து அதிக நட்சத்திரங்கள் உள்ளவற்றை வாங்கவும். குறைந்தது 3-ஆவது இருத்தல் நல்லது.. 4 நட்சத்திரங்கள் நன்றாக இருக்கும். 5 இருப்பது கடினம்.. இருப்பினும் அதிக மின்சக்த்தியை பயன்படுத்தினாலும் பராவாக இல்லை அதைக காற்று வேண்டும் என எண்ணுபவர்கள் 5 அல்லது 6 பிளேடுகளைக் கொண்ட மின்விசிறி உபயோகமாக இருக்கும். அதற்கேற்றார்போல் அறை பெரிதாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் சரியானதாக இருக்காது.