முகப்பு » புகைப்பட செய்தி » வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

வீட்டில் அதிக அளவில் ரசாயனங்களை பயன்படுத்துவது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கும் நல்லதல்ல. இதனால் பணமும் அதிகமாக செலவாகும். எனவே கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதே போதுமானது.

  • 18

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்கி தெளிப்பதோ அல்லது பூச்சி மருந்து அடிக்க ஆட்களை வரவழைப்பது என செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி வீட்டில் அதிக அளவில் ரசாயனங்களை பயன்படுத்துவது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கும் நல்லதல்ல. இதனால் பணமும் அதிகமாக செலவாகும். எனவே கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதே போதுமானது. இந்த டிப்ஸை கவனியுங்கள்..

    MORE
    GALLERIES

  • 28

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்: கரப்பான் பூச்சிகளைப் போக்க பேக்கிங் சோடா சிறந்தது. ஒரு கிளாஸ் தண்ணீரில் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து, அதில் சிறிது சர்க்கரை சேர்க்கவும். இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் அதிகம் வரும் இடங்களில் தெளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 38

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    மண்ணெண்ணெய் பயன்படுத்தலாம்: மண்ணெண்ணெய் பயன்படுத்த அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா கரப்பான் பூச்சிகளும் ஓடிவிடும். இதற்கு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணெய்யை நிரப்பி கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் அதன் வாசனை தாங்க முடியாமல் ஓடிவிடும்.

    MORE
    GALLERIES

  • 48

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    பலா இலை பொடியை பயன்படுத்தவும் : கரப்பான் பூச்சிகளை விரட்ட பலா இலை பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு இலையை நைசாக அரைக்கவும். இதற்குப் பிறகு இந்தப் பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறிது சிறிதாகத் தூவவும்.

    MORE
    GALLERIES

  • 58

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    பெப்பர்மின்ட் ஆயில் தெளிக்கவும் : கரப்பான் பூச்சிகளை விரட்ட பெப்பர்மின்ட் ஆயிலையும் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மின்ட் எண்ணெயை கலக்கவும். பின் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் தெளிக்கவும்.

    MORE
    GALLERIES

  • 68

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    கிராம்புகளைப் பயன்படுத்துங்கள் : வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட கிராம்புகளை பயன்படுத்தலாம். இதற்கு 12-15 கிராம்புகளை தூள் செய்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் வைக்கவும். கிராம்புகளை தண்ணீரில் கொதிக்க வைத்தும் தெளிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 78

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    எலுமிச்சை : எலுமிச்சையின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது எனவே எலுமிச்சை சாற்றை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தெளிக்க ஓடிவிடும் அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்தாலே போதும்.

    MORE
    GALLERIES

  • 88

    வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா..? ஒரே நாளில் விரட்டும் சூப்பர் டாப் 5 டிப்ஸ்..!

    பூண்டு : பூண்டின் நெடி கராப்பான் பூச்சிகளை ஒரு நொடி கூட தங்க விடாது. எனவே பூண்டை இடித்து கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவி விடுங்கள். இல்லையெனில் பூண்டை அரைத்து தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.

    MORE
    GALLERIES