உங்கள் கட்டிலை சுற்றிலும் மூட்டை பூச்சி இருந்தால், கண்டிப்பாக உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. இது, மனித இரத்தத்தை குடித்து வாழும் ஒரு மிகச்சிறிய பூச்சி. மூட்டை பூச்சி இரவு நேரங்களில் தான் ரெம்ப சுறுசுறுப்பாக செயல்படும். இந்த மூட்டை பூச்சியின் முட்டைகள் நம்ம வீட்டிற்கு வருபவர்களின் லக்கேஜ், உடைகள், பர்னிச்சர் மூலம் அனைத்து வீடுகளுக்கும் எளிமையாக பரவும். மூட்டை பூச்சி கடிப்பால் அலற்சி, சரும தடிப்பு போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பூச்சிகளை விரட்ட உதவும் சில எளிமையான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.