வெவ்வேறு வடிவங்களைப் பயன்படுத்துங்கள் : மினிமல் இன்டீரியல் அலங்காரங்களை விரும்பும் போது, கோடுகள் மற்றும் வடிவங்கள் சீராக (symmetrical) இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வெவ்வேறு வடிவங்களுடன், கோடுகளின் தொடர்ச்சியான வடிவம் அழகான தோற்றத்தைக் ஏற்படுத்தும். நீங்கள் விரும்பும் வடிவில் வெவ்வேறு வடிவங்களை பயன்படுத்தலாம்.
வால்பேப்பர்களை உபயோகியுங்கள் : தற்போது, வீட்டின் வெவ்வேறு இடங்களுக்கு, பொருந்தக்கூடிய கச்சிதமான வால்பேப்பர்கள் கிடைக்கின்றன. எந்த இடத்திற்கு எவ்வகையான வால்பேப்பரை பயன்படுத்தினால், சரியாக இருக்கும், கச்சிதமான உணர்வைத் தரும் என்பதற்கு கணிசமான நேரம் செலவழித்து தேவையான வால்பேப்பரைக் கண்டறியவும். ஒரு அறையின் எல்லா பகுதிகளிலும் வால்பேப்பரை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு சுவரைத் தேர்ந்தெடுத்து, பிரகாசமான அல்லது அடர் நிறத்தில் அச்சிடப்பட்ட வால்பேப்பர்களால் அலங்கரிக்கவும்.
மினிமல் லைட்டிங் : பளிச் பளிச் என்ற பிராகசமான விளக்குகளை தினமும் பயன்படுத்துவது வீட்டின் அலங்காரத்தைக் கெடுக்கும். திருவிழாவுக்கு அல்லது விசேஷ வீட்டில் இருப்பது போலத் தோன்றும். அதுவும், எளிமையான, மினிமலிசத்தின் மைல்டான ஒளி மிகவும் அவசியம். அதாவது, குறைவான ஒளி கொண்ட விளக்குகள் பயன்படுத்தி, மங்கலான அல்லது வெளிச்சம் இல்லாத வீட்டில் வாழ வேண்டும் என்பது அர்த்தமல்ல. மினிமலிசம் என்பது ஒளி மற்றும் அதற்கு இடையிலான இடைவெளியுடன் எவ்வாறு வெளிச்சத்தை உண்டாக்குகிறது என்பதைப் பற்றியது. இயற்கையான மற்றும் செயற்கை ஒளி வீட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றார் போல லைட்டிங்கை அமையுங்கள்.
மதிப்பு கூட்டும் பொருட்கள் : உண்மையிலேயே வீட்டு அலங்காரத்து மதிப்பு கூட்டும் பொருள் என்பது தேவையற்ற பொருட்களை நீக்கினாலே போதுமானது. காலியாக இருக்கும் இடங்களில், சுவர்களில் எல்லாம் எதையாவது வைத்து நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஃபிரேம்கள், கவனம் ஈர்க்கும் கலைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சேர்க்கலாம்.
மோனோக்ரோம் தேர்வு செய்யுங்கள் : பல வண்ணங்களில் வீட்டை அலங்கரித்தால், ஆரம்ப காலத்தில் உற்சாகமாக இருக்கும், ஆனால் போகப் போக உறுத்தும். குறைந்தபட்ச இன்டீரியர் அலங்காரத்து, ஒரே கலர் பேலட்டுகளில் இருந்து , மோனாக்ரோம் என்ற ஒரே நிறத்தைப் பயன்படுத்தவும். ஒரே நிறத்தில் அறையை அமைக்கும் போது, பார்ப்பதற்கு குளிர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் இருக்கும். இதனால், செலவும் குறையும்.