டாய்லெட்டை எப்படியெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும்..? அதற்கான முறைகள் என்னென்ன?
சுத்தமான கழிப்பறை என்பது ஆடம்பரத்தை விட முக்கியமான ஒன்று.
Web Desk | March 4, 2021, 7:36 AM IST
1/ 7
கொரோனா வைரஸ் இந்தியாவில் தோன்றி சரியாக ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்பொழுது பலரும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வெளியில் சென்று வந்தால் கை கால்களை கழுவுவது, மளிகை பொருட்களை கழுவுவது, சானிடைசர்களை பயன்படுத்துவது, கதவு கைப்பிடிகளை அடிக்கடி துடைப்பது போன்ற சுத்தம் சம்பந்தமான செயல்களை அனைவரும் செய்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு புறம் நமக்கு நம்மை அளித்தாலும் நாம் தினமும் பயன்படுத்தும் நம் டாய்லெட்டை எப்போதெல்லாம் எப்படி எல்லாம் சுத்தம் செய்வது என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
2/ 7
சுத்தமான கழிப்பறை என்பது ஆடம்பரத்தை விட முக்கியமான ஒன்று. அதை முழுமையாக கடைபிடிக்க வேண்டியதும் கூட. கழிப்பறை சுத்தம் செய்ய க்ளீனர்கள், சிறந்த டாய்லெட் பிரஷ், சிறிதளவு கிருமிநாசினி மற்றும் உங்கள் விடுமுறை நாளின் சில மணித்துளிகள் தேவை. நீங்கள் உங்கள் கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதாய் ஒரு மாயையை உருவாகியுள்ள போதும் அங்கு சில்லியன் (Zillion) கணக்கில் பிளவுகள் மற்றும் விரிசல்களில் பல நுண்ணிய கிருமிகள் பாக்டீரியாக்கள் உங்களை சிக்கலுக்குள் தள்ளுவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றன.
3/ 7
கிருமிநாசினி (Disinfectant): டாய்லெட்டில் கிருமிநாசினியை தெளித்து ஒரு இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். ஏனெனில் சில வைரஸ்கள் எளிதில் ஒழியாது, பிடிவாதமாக டாய்லெட்டில் தங்கியிருக்கும் அவற்றை அழிக்க இந்த கிருமிநாசினி தெளிப்பு நீண்ட நேரம் இருக்க வேண்டும். இதோடு பிரஷ்ஷை க்ளீனிங் சொலுஷனிலோ கிருமிநாசினியிலோ ஊறவைத்து, பிறகு டாய்லெட் முழுதும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். சுத்தம் செய்த பின்னர் பிரஷ்ஷை நன்கு சுத்தப்படுத்தவும். அதோடு ஆசிடையும் ஊற்றி ஊறவைத்து கழுவலாம். இப்படி செய்தால் கழிப்பறை பளபளக்கும்.
4/ 7
பிரஷ்: உங்கள் கழிவறை மற்றும் கழிவறை விளிம்புகளுக்கு ஏற்றார் போல் பிரஷை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்கையில் கழிப்பறை விளிம்புகளில் சுத்தத்திற்கு அதிக கவனம் செலுத்துங்கள் மேலும் அதை சுத்தப்படுத்த கொஞ்சம் அதிகப்படியான எல்போ கிரீஸை பயன்படுத்துங்கள் ஆசிடையும் பயன்படுத்தலாம். இது மிக நுணுக்கமான வேலை என்பதால் கைகளுக்கு பாதுகாப்பு உறை போட்டுக்கொள்வது முக்கியம்.
5/ 7
ஒயிட் வினிகர்: ஃப்ளஷ் டேங்கில் (flush tank) வெள்ளை வினிகரை ஊற்றுவதால் ஒவ்வொரு ஃப்ளஷின் போதும் புதிய வாசனை வருவதோடில்லாமல் இது உங்கள் சானிடரி வேர் (sanitary ware) மீது எந்த வித நீரும் தேங்காமல் பார்த்துக்கொள்கிறது. வினிகர் ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் கரை நீக்கும் நண்பன், இது 100% நச்சுத்தன்மையற்றது. அதனால் இதை உங்கள் கழிவறை வடிகால்களில் எப்போதும் ஃப்ளஷ் செய்வதற்காக ஊற்றலாம். நீங்கள் கொஞ்சம் சிட்ரோனெல்லா அல்லது யூகலிப்டஸ் எண்ணையை வினிகருடன் கலந்து ஃப்ளஷ் டேங்கில் ஊற்றினால் ஒவ்வொரு பிளஷின் போதும் நல்ல வாசனை கிடைக்கும் மற்றும் வாசம் நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்கும். ஃப்ளஷ் செய்வது மிக முக்கியம். நன்றாக ஃப்ளஷ் செய்துள்ளீர்களா என்று பார்ப்பதுடன் கழிவுகள் சரியாக நீக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்பது முக்கியம்.
6/ 7
டாய்லெட் சுத்தத்திற்க்கான எளிய வழி: டாய்லெட் பீங்கானை சுத்தப்படுத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. வினிகரை கொண்டு பீங்கானில் ஸ்ப்ரே செய்து 8 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு சாதாரணமாக சோப்பு நீர் விட்டு பிரஷ்ஷை கொண்டு தேய்த்தாலே டாய்லெட் பளிச்சிடும். ஆசிட் பயன்படுத்தும் போது டாய்லெட் பீங்கானின் நிறம் மாறும். ஆனால் வினிகர் பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது டாய்லெட் பளிச்சென்று நிறம் மாறாமல் இருக்கும்.பாத்ரூம் டைல்ஸ் மற்றும் தரையையும் வினிகரை கொண்டு சுத்தம் செய்யலாம்.
7/ 7
வீட்டில், டாய்லெட், பாத்ரூம் போன்ற இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். தினசரி பாத்ரூம் மற்றும் டாய்லெட்களை சுத்தம் செய்தாலும், வாரம் ஒரு முறை முழுமையாக சுத்தம் செய்வது கிருமிகளை தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு மேற்சொன்ன டிப்ஸ்கள் நிச்சயம் உதவும்.