பச்சை மிளகாய் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த காய்கறி. அது இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. அதனால் சமையலறையில் பச்சை மிளகாய் எப்போதும் இருக்கும். பச்சை மிளகாய் எவ்வளவு காரமாக உள்ளதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமும் நிறைந்தது. இந்த காய்கறியில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், இது மிக விரைவாக அழுகி கெட்டுவிடும். ஏன் பச்சை மிளகாயை பிரிட்ஜில் வைத்தால் பல நாட்கள் வருமே என்று நீங்கள் நினைக்கலாம். பிரிட்ஜில் வைத்தாலும் மிளகாய் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காது. பச்சை மிளகாயை 2 மாதங்கள் வரை ஃபிரெஷாக வைத்திருக்க சில எளிமையான உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
ஜிப்லாக் பைகளை பயன்படுத்தவும் : நீங்கள் வாங்கும் மிளகாய் நீண்ட நாள்களுக்கு பச்சையாக வைத்திருக்க ஜிப்லாக் முறை சிறந்தது. முதலில் பச்சை மிளகாயை சுத்தமாக கழுவவும். அதை ஈரம் இல்லாமல் துடைத்து, அதன் காம்பு பகுதியை நீக்கி ஜிப்லாக் பைகளில் (zip lock bags) அடைத்து பிரிட்ஜில் வைக்கலாம். இப்படி செய்வதால் மிகளாய் நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் பச்சையாகவே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
காற்று புகாத ஜாடி அல்லது டப்பாக்கள் : நன்றக கழுவிய மிளகாயின் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு ஈரம் இல்லாமல் துடைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு மென்மையான உலர்ந்த துணியை காற்று புகாத டப்பா அல்லது ஜாடியின் உள்புறத்தில் வைத்து அதன் மீது காற்று சுத்தம் செய்த மிளகாயை வைத்து காற்று புகாமல் மூடி பிரிட்ஜில் வைத்தால் 20-25 நாள்கள் கூட பச்சை மிளகாய் அப்படியே இருக்கும். பிரிட்ஜ் இல்லாதவர்கள் வெளியிலும் வைக்கலாம்.
அலுமினிய பாயில் முறை : பச்சை மிளகாயைப் பாதுகாப்பதற்கு மற்றொரு வழி அலுமினிய பாயிலை வைத்து பாதுகாப்பாக வைக்கும் முறை. வழக்கம் போல முதலில் மிளகாயை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்னர் காம்புகளை நீக்கிவிட்டு ஈரப்பதம் இல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.. ஒரு தட்டில் மிளகாயை வைத்து அதன் மீது அலுமினியம் ஃபாயிலை (Aluminium Foil) வைத்து மூடி வைக்க வேண்டும். பின்னர் அந்த தட்டை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
பச்சை மிளகாய் மோசமாவதை எப்படி கண்டறிவது? : மேற்கண்ட முறைகளை பின்பற்றி பச்சை மிளகாயை் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் கெட்டுப்போகிவிடும். எனவே பச்சை மிளகாய் நிறம் மாறத்தொடங்கி லேசான துர்நாற்றத்தை வீசத் தொடங்கியதும் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லாடிவிடில் மீதமுள்ள பச்சை மிளகாய்களையும் பாதித்துவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.