முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

நாள்தோறும் மணி மற்றும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதால், பித்தளைப் பாத்திரங்களான அவை எண்ணெய் படிந்து அழுக்காகும். இதனை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

  • 16

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    இந்திய வீடுகளில் பூஜை அறைகள் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் கடவுள் படங்களை அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். அப்போது, விளக்கு, மணி உள்ளிட்ட பூஜை பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். நாள்தோறும் மணி மற்றும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதால், பித்தளைப் பாத்திரங்களான அவை எண்ணெய் படிந்து அழுக்காகும்.

    MORE
    GALLERIES

  • 26

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    இதனை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்களை பின்பற்றினால், அதனை பளபளப்பாக்க வைத்திருக்க முடியும். உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ...

    MORE
    GALLERIES

  • 36

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    1. எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா பாலிஷ் : எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா பாலிஷ், உங்களின் எண்ணெய் படிந்த பாத்திரங்களை எளிதாக பளபளப்பாக்கும். அதற்கு ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் வெட்டிய எலுமிச்சைப் பழத்தை நன்றாக பிழிந்து பேஸ்ட் ஆகும் வரை கிளற வேண்டும். அந்தப் பேஸ்டை எடுத்து எண்ணெய் படிந்த அந்த பாத்திரங்களின் மீது தேய்த்து விடுங்கள். சுமார் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி, உலர வைத்துவிடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 46

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    2. எலுமிச்சை மற்றும் உப்பு பாலிஷ் : எலுமிச்சை, உப்பு கலந்து தயாரிக்கப்படும் பேஸ்ட், பித்தளைப் பாத்திரங்களை சுத்தம் செய்ய மற்றொரு சிறந்த வழி. எலுமிச்சைப் பழம் ஒன்றை எடுத்து அதனை பாதியாக வெட்டி, அரை எலும்மிச்சைப் பழத்தை உப்பில் பிழிந்து கலக்கிக்க்கொள்ளுங்கள். இப்போது, அந்த கலவையை எடுத்து எண்ணெய் படிந்துள்ள அல்லது பிசுபிசுப்பாக இருக்கும் பகுதியில் தடவி, வெதுவெதுப்பான நீரில் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் பாத்திரம் பளபளப்பாக மாறும்.

    MORE
    GALLERIES

  • 56

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    3. மாவு, உப்பு மற்றும் வெள்ளை வினிகர் : கடலை மாவு உள்ளிட்ட ஏதேனும் ஒரு மாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சம அளவில் உப்பு மற்றும் வெள்ளை வினிகரை கலக்குங்கள். அந்தப் பேஸ்டை எண்ணெய் பிசுபிசுப்புள்ள பாத்திரத்தின் மீது தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் உலர வைத்துவிடுங்கள். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்தப் பாத்திரத்தைக் கழுவி எடுக்கும்போது, பளபளவென உங்களின் பூஜை பாத்திரம் மின்னும்.

    MORE
    GALLERIES

  • 66

    பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...

    4. தாக்காளி பேஸ்ட் அல்லது கெட்ச்சப் : கறை படிந்த அல்லது உலோகங்களின் மீது இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்புகளை நீக்குவதற்கு தக்காளி பெஸ்ட். இதில் இருக்கும் அமிலம் எண்ணெய் பிசுபிசுப்புகளை சுத்தமாக நீக்கிவிடும். தக்காளி பேஸ்ட் அல்லது தக்காளி கெட்ச்சப் என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதனை அழுக்கு பாத்திரத்தில் தடவி சுமார் 1 மணி நேரம் விட்டுவிடுங்கள். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவும்போது பிசுபிசுப்புகள் பாத்திரத்தின் மீது தங்காது.

    MORE
    GALLERIES