தோராயமாக ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக வசதி படைத்தவர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் வீடுகளில் மட்டுமே இடம் பிடித்திருந்த ஃபிரிட்ஜ் என்னும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அனேகமாக அனைத்து வீடுகளிலும் இடம்பெற்றுள்ளது. நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஃபிரிட்ஜ் என்றால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைப்பதற்கான இடம் ஆகும். அதில் வைக்கும் பொருட்களின் தரம் குறையாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
ஆனால், ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில உணவுப் பொருளின் நிறம், சுவை, மனம் ஆகியவை மாறி விடுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களை மாத கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அது கெட்டுப் போகும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆகவே, ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ…