இதற்காக சில electrical dehumidifier-ஐ வாங்க விரும்புவார்கள். டிஹுமிடிஃபையர் என்பது காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவை குறைக்க, துர்நாற்றத்தை அகற்ற, பூஞ்சை காளான் வளர்ச்சியை தடுக்க பயன்படுகிறது. இது காற்றில் இருந்து தண்ணீரை பிரித்தெடுப்பதன் மூலம் செயல்படுகிறது. எனினும் ஈரப்பதத்தை உறிஞ்ச டிஹுமிடிஃபையருக்கு பதிலாக சிறந்த தேர்வாக குளியலறை செடிகள் இருக்கின்றன. ஆம், தாவரங்களை வெளிப்புறங்களில் அல்லது உட்புறங்களில் தொட்டிகளில் வளர்ப்பது போல, நம் பாத்ரூமிலும் வைத்திருக்கலாம். இங்கே ஈரப்பதத்தை உறிஞ்சும் சில குளியலறை தாவரங்கள் பற்றி பார்க்கலாம்..
அசேலியா (Azalea):இந்த செடி மிக அழகான பூக்களுடன் ஊதா, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது வெள்ளை நிற வர்ணத்தில் இருக்கும். இது இயற்கையிலேயே வெது வெதுப்பாக மற்றும் ஈரப்பதமாக இருக்கும். எனவே உங்கள் குளியலறையில் குறிப்பாக இந்த செடிக்கு காலை சூரிய ஒளியை வழங்கினால்அசேலியா சிறப்பாக செயல்படும். நன்கு வடிகட்டிய கொள்கலனில் வைத்து, குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும். பானைகளில் அடைக்கப்பட்ட அசேலியாக்கள் பெரிதாக வளராது, மெதுவாக மட்டுமே வளரும்,
பீஸ் லில்லி (peace lily):மற்றொரு நல்ல தோற்றமுடைய குளியலறை தாவரமாக உள்ளது இந்த பீஸ் லில்லி. இதன் இலைகள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்ச பயன்படுகிறது மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. மண் காய்ந்தவுடன், குறிப்பாக தாவரத்தின் இலைகள் வாடி உதிர தொடங்கும் போது மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
டில்லான்சியா (Tillandsia):டில்லான்சியா தாவரமானது அதன் இலைகள் மூலம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. குளியலறை செடிகளில் இது ஒரு அருமையான தேர்வாகும். ஏனென்றால் இதை வளர்க்க உங்கள் கைகளை மண்ணால் அழுக்காக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒவ்வொரு வாரமும் சில நிமிடங்கள் குழாய் நீரில் ஊறவைத்தாலே போதும். இதற்கு அதிக சூரிய ஒளியும் தேவையில்லை.