பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. டெங்கு, மலேரியா, போன்ற காய்ச்சல்கள் கொசுக்கள் மூலமாக பரவுகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். வீட்டின் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் மூடி பத்திரமாக உள்ளே இருந்தாலும், இந்த கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது கடினமான காரியம் தான். ஒரு சிறிய கேப் கிடைத்தால் போதும், கொசுக்கள் நுழைந்து விடும்.
பருப்பு பூ (ஃப்ளோஸ் மலர்) : பருப்பு பூவில் காணப்படும் கௌமாரின் என்ற வேதிப்பொருளானது பூச்சி விரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இந்த வேதிப்பொருளில் இருந்து வெளிவரும் வாசனையை கொசுக்களால் சுவாசிக்க முடியாது என்பதால் அவை அந்த இடத்தை விட்டு பறந்து செல்கின்றன.
சாமந்திப் பூக்கள் : பூச்சித்தொல்லைகள் அதிகமாக இருக்கும் வீடுகளில் சாமந்திச் செடிகளை வளர்த்து வருவது சிறந்த பலனை அளிக்கும். சாமந்திப்பூக்களில் காணப்படும் லிமோனின் என்ற இயற்கை சேர்மம் ஆனது பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இது சிற்றூசி அரோமா என்ற வாசனையை வெளியிடுவதன் மூலமாக கொசுக்களை விரட்டுகிறது.