காலை கடனில் முதலில் நாம் துவங்குவது பேஸ்டுடன்தான். பல் துலக்கிய பின்புதான் எதையும் செய்ய வேண்டும் என்பதே சுகாதாரப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. அதனால்தான் காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? மேலும் படியுங்கள்...
உங்கள் பைக் அல்லது ட்ராலி பேக்-ஐ சுத்தம் செய்ய, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் அரை டீஸ்பூன் பற்பசையை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். பின்னர், உங்கள் டிராலி பேக்கின் கறை படிந்த இடத்தில் பேஸ்டை தடவி, சுத்தமான துணி அல்லது பிரஷ் மூலம் மெதுவாக தேய்க்கவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்ததும், சுத்தமான, ஈரமான துணியால் பற்பசையைத் துடைக்கவும். உங்கள் பைக்கை புதிதுபோல் பளபளக்கச் செய்யவும் இந்த டிப்ஸை முயற்சி செய்யலாம்.