சமீப காலமாக மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாகவே, தண்ணீர் பற்றாக்குறை, இந்தியாவின் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. தாகமெடுக்கும் போதெல்லாம் நீர் ஆதாரங்களை தேடித்தான் ஓடவேண்டும் என்கிற புரிதலும், நீர் சேமிப்பின் முக்கியத்துவமும், மனிதர்களை விட பறவை மற்றும் விலங்கினத்திற்கு அதிகம் என்று கூறினால் நம்மில் பலரும் கோபம் கொள்ள மாட்டோம். ஏனெனில் அதுதான் உண்மை.
இந்தியாவில் மட்டும்மல்ல உலகின் பல நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இந்த கட்டத்தில் தான் நீர் ஆதாரங்களின் மேலான புரிதல் மற்றும் நீர் சேமிப்பின் முக்கியத்துவதோடு சேர்த்து "தண்ணீர் சிக்கனம்" குறித்த தெளிவும் நமக்கு தேவைப்படுகிறது. தண்ணீர் வீணாவதைக் குறைக்க உதவும் ஒரு சிறிய பொருளைப் பயன்படுத்துவது அல்லது ஒரு சிறிய நடவடிக்கையை எடுப்பது கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விடயத்தின் கீழ் ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பை கொடுப்பது - தற்கால அவசியமாகும்; வருங்காலத்தின் அத்தியாவசியமாகும்!
பாத்திரங்களை "இப்படி" கழுவினால் என்ன : பாத்திரங்களை கைமுறையாக கழுவுவதை விட, ஒரு டிஷ்வாஷரை பயன்படுத்தினால் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்தலாம். பிரபல நிறுவனங்களின் டிஷ்வாஷர்கள் வருடத்திற்கு சுமார் 18,250 லிட்டர் தண்ணீரை சேமிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. உண்மையிலேயே இதுவொரு பெரிய எண்ணிக்கை; பெரிய அளவிலான நீர் சேமிப்பும் கூட! எனவே நீங்களும் ஒரு டிஷ்வாஷரை பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்கத் தொடங்கலாம் மற்றும் உங்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த உலகத்தை விட்டுச் செல்லலாம்.
வாஷிங் மெஷின்களில் "இதை" தேர்வு செய்வது வல்லது : ஒரே அளவுள்ள டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களை விட ஃப்ரென்ட்-லோடிங் வாஷிங் மெஷின்கள் 70% குறைவான தண்ணீரையே பயன்படுத்துகின்றன. ஏனெனில், ஃப்ரென்ட்-லோடிங் வாஷிங் மெஷின்கள் ஆனது துணிகளை மீண்டும் மீண்டும் மேலே எடுத்து நீரில் விடுவதன் மூலம் அலசுகிறது; துவைக்கிறது. ஆனால் டாப்-லோடிங் வாஷிங் மெஷின்களானது துணிகளை தண்ணீரில் மிதக்க விட்டு துவைக்கிறது.
வாட்டர் ப்யூரிஃபையர் தேர்விலும் புத்திசாலித்தனம் தேவை : ஆர்ஓ வாட்டர் ப்யூரிஃபையர்கள் ஆனது பல்வேறு நிலைகளில், பல்வேறு வகையான அசுத்தங்களை அகற்ற பலநிலை சுத்திகரிப்பு செயல்முறையைப் பயன்படுத்துகின்றன. இந்த செயல்பாட்டின் போது ஒரு சிறிய அளவிலான தண்ணீர் வீணாகுவது வழக்கம். இந்த இடத்தில், அதிகப்படியாக நீரை வீணாக்காமல், மிகவும் குறைவான 'வாட்டர் வேஸ்டேஜை' வழங்கும் ஒரு வாட்டர் ப்யூரிஃபையரை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
அவ்வப்போது மண்ணின் ஈரப்பதத்தை அளவிடலாம்; ஏனென்றால்? : புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்களுக்கு, அதன் பெயர் வழியாகவே சுய விளக்கமளிக்கும் ஒரு சாதனம் தான் - சாயில் மாய்ஸ்டர் மீட்டர் (Soil moisture meter). இந்த மீட்டர்கள் மண்ணின் ஈரப்பதத்தை அளவிட உதவுகின்றன. இவைகள் ஓவர்-வாட்டரிங்கை (Over-Watering) அதாவது அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தடுக்க கைகொடுக்கும். அறியாதோர்களுக்கு ஓவர்-வாட்டரிங் என்பது தாவரங்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.