முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

பழைய துணியாக இருந்தாலும் சரி, ஸ்பாஞ்ச் ஆக இருந்தாலும் சரி, துடைக்கும் துணியில் அவ்வப்போது துர்நாற்றம் அடித்து மூக்கை படிக்க வேண்டியதாக இருக்கும். புதிதாக வாங்கி வைத்தால் கூட துடைக்கும் துணி ஃபிரெஷ்சாக இருப்பதில்லை.

 • 18

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  கிச்சன் பளபளவென்று, சுத்தமாக, நல்ல நறுமணத்துடன் இருப்பது தானே அனைவருக்கும் பிடிக்கும். அவ்வாறு சமையலறையை தூய்மையாக, பளிச்சென்று வைத்துக் கொள்ள, சமையல் அறையில் சுத்தம் செய்வதற்காக பெரும்பாலும் பழைய துண்டுகள் அல்லது பயன்படுத்தப்பட்ட துணிகளை வெட்டி, தோய்த்து பயன்படுத்துவது வழக்கம். பொதுவாகவே சமையலறை சுத்தம் செய்யும் துணி, துடைக்கும் துணி என்றாலே ரொம்ப பழசான துணி தான் நம் நினைவுக்கு தோன்றும். ஒரு சில வீட்டில் ஸ்பாஞ்ச் பயன்படுத்துவார்கள்.

  MORE
  GALLERIES

 • 28

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  பழைய துணியாக இருந்தாலும் சரி, ஸ்பாஞ்ச் ஆக இருந்தாலும் சரி, துடைக்கும் துணியில் அவ்வப்போது துர்நாற்றம் அடித்து மூக்கை பிடிக்க வேண்டியதாக இருக்கும். புதிதாக வாங்கி வைத்தால் கூட துடைக்கும் துணி ஃபிரெஷ்சாக இருப்பதில்லை. இதன் வாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த மோசமான ஸ்மெல் மட்டுமல்ல, இந்தத் துணிகள் பாக்டீரியாக்களின் சொர்க்கமாக மாறி விட்டன. பாத்திரம் துலக்கும் ஸ்பான்ஜில் நூற்றுகணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிச்சன் சுத்தமாக இருந்தாலும், கிச்சனில் வைத்திருக்கும் ஸ்பான்ஜ் அல்லது துடைக்கும் துணியில் வாடை வீசினால்? துடைக்கும் துணியில் இருக்கும் நாற்றத்தை போக்குவதற்கு எளிய டிப்ஸ் இங்கே.

  MORE
  GALLERIES

 • 38

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  கொதிக்கும் நீரில் போடவும் : பாத்திரம் துலக்கும் ஸ்பான்ஜ் மற்றும் துடைக்கும் துணிகள் ஆகியவற்றை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் இருக்குமாறு போட்டு வைக்கவும். துணி மிகவும் அழுக்காகவோ அல்லது துர்நாற்றம் அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில், ஒரு ஸ்பூன் சோப்பு தூள் அல்லது எலுமிச்சை சாறு ஆகியவற்றை கொதிக்கும் நீரில் சேர்க்கலாம். இது கிருமிகளை கொல்வதோடு மட்டுமல்லாமல் அந்த மோசமான ஸ்மெல்லையும் நீக்கும்.

  MORE
  GALLERIES

 • 48

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  உப்பு மற்றும் வினிகர் கலவையில் ஊற வைக்கவும் : தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, சூடான நீரில், வினிகர் மற்றும் உப்பு சேர்த்து ஸ்பான்ஜ் மற்றும் துணியை முதல் நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் அவற்றை நன்றாக எடுத்து அலசி பிழிந்து வெயிலில் காயவைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 58

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  ஸ்பான்ஜை மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும் : மைக்ரோவேவ் ஓவனை ப்ரீ-ஹீட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஈரமான ஸ்பான்ஜை மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைத்து ஹீட் செய்யவும். மைக்ரோவேவ் ஓவனிலேயே ஆறும் வரை அப்படியே இருக்கட்டும். எப்போதுமே உலர்ந்த துணிகளை மைக்ரோவேவ் அவனுக்குள் வைக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  பிளீச் செய்யுங்கள் : கிச்சனில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துணிகளை பாக்டீரியா மற்றும் அழுக்கின்றி வைப்பதற்கு பிளீச்சிங் செய்வது மிகச் சிறந்த வழியாகும். தண்ணீர் மற்றும் பிளீச் கலந்த கலவையில் துணிகள் மற்றும் ஸ்பாஞ்சுகளை ஊறவைக்கவும். 5 – 7 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்றாக அலசி வெயிலில் காய வையுங்கள்.

  MORE
  GALLERIES

 • 78

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  கிருமிநாசினிகளை பயன்படுத்துங்கள்: கிருமிநாசினிகள் தற்போது பெரும்பாலான மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எனவே நீங்கள் துணிகள் மட்டும் ஸ்பாஞ்சுகளில் இருக்கும் பாக்டீரியாவை நீக்குவதற்கு டிஸின்ஃபெக்டன்ட் என்று கூறப்படும் கிருமி நாசினிகளை வாங்கி துடைக்கும் துணியின் மீது தெளிக்கலாம். இது பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  சமையலறையில் துடைக்கும் ஸ்பாஞ்ச் மற்றும் துணிகளில் உள்ள கறைகளை நீக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

  இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால், உங்கள் கிச்சன் சுத்தமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மோசமான வாடையும் இல்லாமல் இருக்கும். இதை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை கிச்சனை துடைக்க பயன்படுத்தும் துணிகள் மற்றும் ஸ்பாஞ்சுகளை மாற்றவும் மறக்காதீர்கள்.

  MORE
  GALLERIES