முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

பிளாஸ்டிக் தயாரிப்புகளை உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்களை சேமிக்க பயன்படுத்துவதன் காரணமாக அதிக அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நச்சுப் பொருட்களை நாம் தினசரி உட்கொள்ளவழிவகுக்கிறது.

 • 18

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  எங்கும், எதிலும் காணப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது பிளாஸ்டிக். நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறி இருக்கிறது. நம் வீட்டில் பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு பூமியை ஆக்கிரமித்துள்ளது பிளாஸ்டிக். சுற்றுப்புறத்திற்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது பிளாஸ்டிக். எப்படி என்றால் குறிப்பாக நம் வீடு கிச்சன்களில் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 28

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  பிளாஸ்டிக் தயாரிப்புகளை உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்களை சேமிக்க பயன்படுத்துவதன் காரணமாக அதிக அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நச்சுப் பொருட்களை நாம் தினசரி உட்கொள்ளவழிவகுக்கிறது. இதன் விளைவு ஆரோக்கிய கேடு என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பல்வேறு வேதியியல் பொருட்கள் மற்றும் பார்முலாக்களை கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இதிலிருக்கும் சில ரசாயனங்கள் மூளை, ஹார்மோன் அமைப்பு, இனப்பெருக்க அமைப்பு ஆகியவற்றை பாதிக்கலாம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைய கூடும்.

  MORE
  GALLERIES

 • 38

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  கிச்சன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் இத்தகைய சில கொடூர கெமிக்கல்கள் உணவு மற்றும் பானங்களில் கலந்து கண்ணனுக்கு தெரியாமல் நமக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. எனவே ஆரோக்கியத்திற்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்றது என்ற வகையில் பிளாஸ்டிக்கை விட தொடர்ந்து விரும்பப்படும் பொருட்களில் ஒன்றாக கண்ணாடி இருக்கிறது. நம் வீட்டு கிச்சனை பிளாஸ்டிக்கிலிருந்து விடுவித்து கண்ணாடிக்கு மாறுவதற்கு அவசியமான சில காரணங்களை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  ஆரோக்கியத்திற்கு தீங்கு: நாம் அன்றாடம் உணவுப்பொருட்கள், பானங்கள் மற்றும் ஸ்னாக்ஸ்கள் வைத்து பயன்டுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டிஃபன் பாக்ஸ்கள், கன்டெய்னர்கள் உள்ளிட்ட பல கிச்சன் பிளாஸ்டிக் பொருட்கள் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சில பிஸ்பெனோல் ஏ (BPA) மற்றும் Phthalates போன்ற பயோ ஆக்டிவ் கெமிக்கல்களை கொண்டுள்ளன. இதில் BPA இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 58

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  மேலும் பிளாஸ்டிக் மூலம் உணவை சூடுபடுத்துவது, சூடான உணவு பொருட்களை வைப்பது உள்ளிட்ட செயல்கள் மூலம் அதில் கலக்கப்பட்டிருக்கும் BPA கெமிக்கல் நேரடியாக நம் ரத்த ஓட்டத்தில் நுழைந்து கருவுறுதலில் சிக்கல், தாக்க வளர்சிதை மாற்றம், மூளை மற்றும் பலவகை கேன்சர் ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளிலும் BPA பாதிப்பு ஏற்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  சுவையை பாதுகாக்கும் கிளாஸ் பொருட்கள் : உணவுகளை சேமிக்க, சமைக்க, சூடுபடுத்த மிகவும் சாத்தியமான விருப்பங்களில் ஒன்றாக கண்ணாடி இருக்கிறது. 100% போரோசிலிகேட் கண்ணாடியிலிருந்து தயாரிக்கப்படும் கிச்சனை பயன்படுத்தகூடிய கண்ணாடி பொருட்கள் உணவுகளின் சுவையை பாதுகாப்பதோடு மற்றும் உணவுகளை சூடாக்கும் போது தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை வெளியிடுவதில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது கண்ணாடி: பிளாஸ்டிக் மக்குவதற்கும், சிதைவதற்கும் பல ஆண்டுகள் ஆகிறது. பிளாஸ்டிக் நச்சுப் பொருள்களை வெளியிடுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் எரிக்கப்படும் போது அதிலிருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். ஆனால் கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கை போல எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. நல்ல தரமான கிச்சன் கண்ணாடி பொருட்கள் மைக்ரோவேவ் அல்லது டிஷ்வாஷருக்குள் எளிதாக பயன்படுத்த முடிகிறது. மேலும் கிளீன் செய்ய எளிதானவை, அவற்றை மீண்டும் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.

  MORE
  GALLERIES

 • 88

  கிச்சனில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக கண்ணாடி பொருட்களை பயன்படுத்துவது நல்லது : ஏன் தெரியுமா?

  அழகிய டிசைன்கள்: பிளாஸ்டிக் தயாரிப்புகளை விட கிச்சன் கண்ணாடி பொருட்கள் அழகிய ஷேப் மற்றும் டிசைன்களில் கிடைகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் நம் வீடு கிச்சனை அழகாக்கலாம். பல வண்ண டிசைன்களில் கிடைக்கும் கண்ணாடி ஜாடிகள், கன்டெய்னர்கள், பாத்திரங்கள் மற்றும் பிற தயாரிப்புகள் அழகான டிசைன்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. எனவே எவ்வித தயக்கமும் இன்றி நீங்கள் கண்ணாடியில் சமைத்து பரிமாறலாம்.

  MORE
  GALLERIES