சமையலறையில் மிக்ஸி பயன்படுத்துவது மிகவும் பொதுவானது. மசாலாப் பொருள்களை அரைக்கவும், சட்னி செய்யவும், அன்றாட சமையலுக்கு தேவையான மசாலாக்களை அரைக்கவும் மிக்ஸியின் உதவி தினம் தினம் தேவைப்படுகிறது. மிக்ஸி பயன்பாடு சமையலறை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இதுவரை மிக்ஸியில் அரைக்க எந்த வரையறையும் இல்லை என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
முழு மசாலாப் பொருட்களையும் அரைப்பதைத் தவிர்க்கவும் : பலரும் இன்ஸ்டன்ட் மசாலா பொருட்களை பயன்படுத்துவதை வீட்டில் ஃபிரெஷாக அரைத்து சேர்ப்பதால் உணவின் சுவை கூடுதலாக இருக்கும். இதற்காக முழு மசாலா க்களை அப்படியே மிக்ஸியில் அரைக்கும்போது மிக்ஸி பிளேட் பழாகலாம். எனவே அதை கொஞ்சமேனும் கையில் இடித்து பின் மிக்ஸியில் மைய அரைத்து பயன்படுத்தலாம்.
சூடான பொருட்களை அரைக்கக் கூடாது : பலர் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சூடான பொருட்களை சாப்பிடுகிறார்கள். அதற்காக சிலர் சூடான பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பிக்கிறார்கள். சூடான பொருள் தரும் அழுத்தத்தால் உங்கள் மிக்ஸி ஜார் வெடிக்கும் அபாயம் உள்ளது. அதனால் சூடான பொருட்களை ஆறிய பின்னரே மிக்ஸியில் அரைப்பது பாதுகாப்பானது.