1. ஐஸ் கட்டிகளை பயன்படுத்துங்கள்: ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் உங்கள் முகத்தில் ஐஸ் கட்டிகளை தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்கள் சருமத்தின் துளைகளை மூட உதவும். உங்கள் சுத்தமான முகத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஐஸ் கட்டிகளை மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த சிம்பிள் டிப்ஸ் உங்கள் தோலுக்குள் வண்ணம் ஊடுருவி சேதங்களை ஏற்படுத்துவதை தவிர்க்க உதவுகிறது.
2. சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துங்கள்: மற்ற நாட்களைப் போலவே ஹோலி பண்டிகையில் வண்ணங்களை தூவி விளையாடுவதற்கு முன்பு சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசர்களை போட்டுக்கொள்ளுங்கள். வெயிலில் ஹோலி விளையாடுவதற்கு முன், உங்கள் தோலின் மீது சன்ஸ்கிரீனை பூசிக்கொள்வது அவசியம். அதிக SPF திறன் கொண்ட சன் ஸ்கீரினை பயன்படுத்த வேண்டும், அப்போது தான் சூரியக் கதிர்கள் உங்கள் சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தாது, மேலும் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவும்.
3. நெயில் வார்னிஷ் பூச மறக்காதீர்கள்: நகங்களில் ஹோலி கலர் பவுடர்களின் நிறங்கள் ஒட்டிக்கொண்டு, வாரக்கணக்கில் போகாமல் நொந்தரவு கொடுக்கலாம். எனவே ஹோலி கொண்டாட்டத்திற்கு முன்னதாக நெயில் பாலிஷ் அல்லது வார்னிஷ் பூசிக்கொள்ளுங்கள். இது உங்கள் நகங்கள் மற்றும் வண்ணங்களுக்கு இடையே ஒரு பாதுகாப்பு அடுக்கு போல் செயல்பட உதவும். இதனால் உங்கள் நகங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
4. சருமத்தை மறைக்கும் படி ஆடை அணியுங்கள்: ஹோலி விளையாட வெளியே செல்லும் போது, உடலின் பெரும்பாலான பகுதிகளை மறைக்கும் விதத்திலான ஆடைகளை அணியுங்கள். இப்படி செய்வதால் வெயில், கலர் பவுடர் போன்றவற்றால் சருமம் பாதிக்கப்படுவதன் அளவு கணிசமாக குறையும். முழு ஸ்லீவ் ஆடைகளை அணிந்தால், சருமத்திற்கு குறைந்த அளவிலான சேதம் மட்டுமே ஏற்படும்.
5. சருமத்திற்கு எண்ணெய் தடவுங்கள்: ஹோலி பண்டிகையில் பங்கேற்க செல்லும் முன்பு உங்கள் சருமத்தின் மீது எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்திற்கும் நிறத்திற்கும் இடையில் ஒரு தடையை உருவாக்க உதவும். எண்ணெய்கள் உங்கள் தோலின் உள்ளே வண்ணங்களை ஊடுருவ அனுமதிக்காதோடு, தோலின் மீது படித்துள்ள நிறங்களை அகற்றவும் உதவும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் போன்ற பல்வேறு எண்ணெய்களின் கலவையைப் பயன்படுத்தலாம்.