காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆண், பெண் இருவருமே தன் அன்புக்குரியவர்களது மனம் கவரும் வகையில் ஒரு கிப்ட் வழங்கி அசத்த வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப காதலன் அல்லது காதலிக்கு பயனுள்ள வகையில் ஏதேனும் ஒரு கிப்ட் வழங்கினால் மட்டுமே மன நிறைவு ஏற்படும். அந்த வகையில், புதுமையாக என்ன கிப்ட் வாங்கலாம் என்பது குறித்து உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
இதை வாங்குவதா, அதை வாங்குவதா என்ற தடுமாற்றம் ஏற்படக்கூடும். கவலையை விடுங்கள், நீங்கள் சரியான கிப்ட் வாங்கி உங்கள் மனம் கவர்ந்தவரை உள்ளம் உருக வைப்பதற்கான சில டிப்ஸ் இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கிறது.அதேசமயம், பழைய ட்ரெண்டிங் முறையில் கேக், சாக்லேட், ரோஸ் என்றெல்லாம் சொல்ல போவதில்லை. அதையும் தாண்டி கொஞ்சம் புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இந்த கிப்ட்கள் இருக்கும்.
வெள்ளை நிற டீசர்ட்: இருக்கும் ஆடைகளிலேயே வெள்ளை நிற டீசர்ட் தான் மிகவும் நேர்த்தியானது. ஏதேனும், ஒரு விசேஷமான நாட்களில் இந்த ஆடையை அணியலாமா அல்லது வேறு ஆடையை அணியலாமா என்று நமக்கு குழப்பம் ஏற்படும்போது எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக மனதுக்கு பிடிக்கும் விஷயமாக வெள்ளை நிற டீசர்ட் இருக்கும். இது கட்டாயம் எல்லோரது அலமாரியில் இருக்க வேண்டும். ஒருவேளை, உங்கள் பார்ட்னரிடம் இது போன்ற வெள்ளை நிற டீசர்ட் இல்லை என்றால், கட்டாயம் நீங்கள் அதை வாங்கிக் கொடுக்கலாம்.
ஸ்மார்ட் வாட்ச்: கட்டுக்கோப்பான உடலை மெயின்டைன் செய்ய வேண்டும் என்பதில் உங்கள் பார்ட்னர் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்றால், நிச்சயமாக அவருக்கு மிகச்சரியான பரிசாக ஸ்மார்ட் வாட்ச் இருக்கும் என்றே கூறலாம். ஒரு நாளில் பெரும்பாலான பகுதியை உங்கள் பார்ட்னர் ஜிம்மில் செலவிடுகிறார் என்றாலும் அல்லது ஜிம் தான் உனக்கு முதல் லவ்வர் என்று நீங்கள் கிண்டல் செய்பவராக இருந்தாலும் இந்த கிப்ட் நிச்சயமாக பொருத்தமானதாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் புரோட்டீன் ஷேக் பாட்டில்கள், பிட்னஸ் பேண்ட் போன்றவற்றையும் நீங்கள் பரிசளிக்கலாம்.
ஸ்பீக்கர்: காதலில் மூழ்கி இருக்கும் எவரும் இசைக்கு அடிமையாகாமல் இருக்க முடியாது. ஆகவே, ஒரு வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர் ஒன்றை வாங்கி நீங்கள் பரிசளித்தால் அதை விடவும் சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. அமைதியான சூழலில் அந்த ஸ்பீக்கரில் பாட்டு கேட்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் நினைவலைகள் அவரது மனதை நிரப்பி வைத்திருக்கும். அதிலும் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் போர்ட்டபிள் ஸ்பீக்கர்ஸ் நல்ல பிராண்டில் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.
புத்தகங்கள்: உங்கள் பார்ட்னர் ஒரு புத்தகப் பிரியர் என்றால் யோசனையே இல்லாமல் கட்டாயம் ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு அவர் நன்றி தெரிவிப்பதுடன், ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்த கூடும். அறை முழுவதும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நிரம்பி இருந்தாலும் புத்தகப் பிரியர் ஒருவருக்கு எப்போதுமே மனநிறைவு ஏற்பட்டுவிடாது. ஆகவே, அவர்களிடம் ஏற்கனவே புத்தகங்கள் இருக்கிறது என்பது குறித்து கவலைப்படாமல் நீங்கள் கட்டாயம் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி கொடுக்கலாம்.