பொதுவாக இந்த காலத்தில் நம் அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி எனப்படும் பிரிஜ்டை பயன்படுத்துகிறோம். குளிர்சாதனப் பெட்டியை அதிகமாகப் பயன்படுத்தும் போது அதன் கதவில் உள்ள gasket ரப்பர் சேதமடைய வாய்ப்புள்ளது. இந்த ரப்பரை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். பலர் இந்த ரப்பரின் அழுக்கை சுத்தம் செய்வதில்லை, இதன் காரணமாக கதவுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். இவற்றை சுத்தம் செய்ய சில டிப்ஸ் இதோ.
பேக்கிங் சோடா எலுமிச்சை சாறு: இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின் இந்த பேஸ்டை கதவு ரப்பர்களின் இடுக்குகளில் தடவி 5 நிமிடம் சுத்தம் செய்யவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்படி செய்தால் வெறும் 10 நிமிடங்களில் அதில் உள்ள கருமை அழுக்கு நீங்கிவிடும்.
பற்பசையைக் கொண்டும் குளிர்சாதன பெட்டியின் கதவை சுத்தம் செய்யலாம். இதற்காக வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்ஷை பயன்படுத்தலாம். பல் துலக்கும் பற்பசை பேஸ்டை பழைய பிரஷ்ஷில் போட்டு கதவு ரப்பரில் தேய்த்தால் ரப்பர் உடனடியாக சுத்தம் செய்யப்படுகிறது. ரப்பரை சுத்தம் செய்வதன் மூலம், நீங்கள் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள்.
எலுமிச்சை: ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறுடன் கலந்து ஒரு துணியின் உதவியுடன் குளிர்சாதன பெட்டி கதவில் உள்ள ரப்பரில் தடவவும். இப்படி செய்தால் சில நிமிடங்களில் அழுக்குகள் நீங்கி சுத்தமாகிவிடும் . (குறிப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் அடிப்படையால் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை)