ஹை-பிளட் பிரஷர் என்பது பெரும்பாலும் சைலன்ட் கில்லர் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட வழிவகுக்கும். குளிர்காலத்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை நம் ரத்த நாளங்களை தற்காலிகமாக சுருங்க செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் நம் ரத்த அழுத்த அளவுகள் நன்றாக இருப்பதை உறுதி செய்ய தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும்.
குளிர்காலமாக இருந்தாலும் கூட சிறிது நேரம் வழக்கமான ஒர்கவுட்ஸ்களை செய்வது, 15 - நிமிடங்கள் வெயிலில் நடப்பது, டயட்டில் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்ப்பது உள்ளிட்ட பழக்கங்கள் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் நிர்வகிக்க உதவும். பிரபல டாக்டர் அபிஜித் எம் தேஷ்முக் குளிர்காலத்தில் நம்முடைய ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சில எளிய டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளார். குளிர்காலத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் முக்கிய டிப்ஸ்கள் இங்கே:
வழக்கமான ஒர்கவுட்ஸ்: குளிர்காலமாக இருந்தாலும், காலை தாமதமாக எழுந்தாலும் தினசரி வெளியில் சென்று ஒர்கவுட்ஸ்களை செய்ய முடியாவிட்டால் அதை அறவே தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. நாளொன்றுக்கு 30-45 நிமிடங்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளை குளிர்காலத்திலும் செய்வது முக்கியம். பொதுவாக குளிர்காலத்தில் நமது உடல் செயல்பாடு குறைவது, ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும்.
ஜங்க் ஃபுட்ஸ், ஆல்கஹால் மற்றும் காஃபினுக்கு நோ: குளிர்காலத்தில் பீட்சா, பாஸ்தா போன்ற ஃபாஸ்ட் ஃபுட்ஸ்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். இதே போல ஆல்கஹால் மற்றும் காஃபின் உட்கொள்ளலை தவிர்க்க வேண்டும் அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் இவை உடலில் இருந்து வெப்ப இழப்பை அதிகரித்து, ரத்த அழுத்தம் உயர வழிவகுக்கும். குளிர்காலமாக இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
உயர் ரத்த அழுத்த சிக்கல் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுவதால் ரத்த நாளங்கள் சுருங்குவதன் காரணமாக ரத்த ஓட்டம் குறுகிய இடத்தில் அதிக வேகமாக பாய்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. இது இதயத்தை அதிக சக்தியுடன் பம்ப் செய்ய காரணமாகி இறுதியாக உயர் ரத்த அழுத்தத்ம் ஏற்படுகிறது. எனவே குளிர்காலத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் நுட்பமான அறிகுறிகளைக் கவனிப்பது முக்கியம்.