முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

Coriander benefits for hair | கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

  • 19

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    Health Benefit Of Coriander : கொத்தமல்லி சமையலறையில் காணப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். கொத்தமல்லி தூள் அல்லது உலர்ந்த கொத்தமல்லி விதைகள் (coriander seeds) கிட்டத்தட்ட அனைவரின் சமையலறையிலும் இருக்கும். கொத்தமல்லி கிட்டத்தட்ட எல்லா காய்கறிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி இல்லாமல் எந்த குழம்பும் முழுமையடையாது.

    MORE
    GALLERIES

  • 29

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    கிரேவிக்களை தவிர, இது பல உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கொத்தமல்லி சுவையை சுவையாக மாற்றும் அதே வேளையில், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.. ஹெல்த்லைனில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி தண்ணீர் ஒரு வரப்பிரசாதம் என கூறப்படுகிறது. அந்தவகையில், கொத்தமல்லி தண்ணீர் எப்படி தயாரிப்பது, அதன் ஆரோக்கிய நன்மை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 39

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    கொத்தமல்லி தண்ணீர் எப்படி தயாரிப்பது ? : ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போடவும். இதையடுத்து, அந்த பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை ஆரவடித்து வடிகட்டினால் மல்லி தண்ணீர் தயார். இதை முதல் நாள் இரவே ஊறவைத்தும் உபயோகிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 49

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    உடலை நீரேற்றமாக வைத்திருக்க : கோடை காலத்தில் கொத்தமல்லி தண்ணீர் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். மல்லி தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குறித்து வந்தால், உடல் நீரேற்றமாக இருக்கும். மேலும் இது, உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது. எனவே, கோடை காலத்தில் மல்லி தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

    MORE
    GALLERIES

  • 59

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி தவிர, பல சத்துக்களும் கொத்தமல்லியில் காணப்படுகின்றன. கொத்தமல்லி பல வீடுகளில் மூலிகை தேநீர் மற்றும் டிகாக்ஷன் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனை தினமும் உட்கொள்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    கொலஸ்ட்ராலை குறைக்கும் : கொத்தமல்லி தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனுடன் இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் கொத்தமல்லி தண்ணீரை தினமும் பருகலாம். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

    MORE
    GALLERIES

  • 79

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    வயிற்றுக்கு நன்மை தரும் : கொத்தமல்லி தண்ணீரை உட்கொள்வது வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வாயு தொல்லை, அஜீரணம் போன்ற பிற பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வயிறு உப்புசம் மற்றும் வாயு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சமாளிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 89

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    சருமத்தை மேம்படுத்தும் : கொத்தமல்லி தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது. கொத்தமல்லியில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 99

    சொன்னா நம்ப மாட்டீங்க… கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலை 1 டம்ளர் கொத்தமல்லி தண்ணீர் போதும்..!!

    மூட்டுக்களை வலுப்படுத்தும் : மூட்டுவலி அல்லது மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் கொத்தமல்லித் தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் ஏகப்பட்ட நன்மைகளை பெறுவார்கள். இது வலியைக் குறைக்க உதவும். கொத்தமல்லி நீர் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

    MORE
    GALLERIES