

யோகா கலை என்பது மனதையும், உடலையும் ஒரு நிலைப்படுத்தும்போது நிகழும் அற்புதம். அப்போதுதான் யோகாவின் நன்மைகளையும் முழுமையாகப் பெற முடியும். அப்படி என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம்.


உடல் அமைப்பு சீராகும் : நாள் முழுவதும் டெஸ்கில் வேலை பார்ப்போருக்குத் தண்டு வடம் பாதிக்கப்படும். என்னதான் அமர்ந்து வேலை பார்த்தாலும் உடல் அசதி அதிகமாக இருக்கும். இவைதவிர கழுத்து வலி , தோள்பட்டை வலி என எல்லாவற்றிற்கும் யோகா சிறந்த பயிற்சி.


இலகுத் தன்மை : யோகாவில் இருக்கும் ஸ்ட்ரெட்சுகள் உடலை மிக இலகுவாக்கும். கால்களைத் தலைக்கு மேல் கொண்டு வருவது, கைகளை மடக்குவது என கை கால்களுக்கு இலகுத் தன்மையை அளிக்கும். இதனால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உடனே உடல் வளைந்து கொடுக்கும்.


தசை வலுப்பெறும் : பலவீனமான தசைகளை வலுப்பெறச் செய்யும். மேலும் தசை வலுவால் உடல் அமைப்பு அழகாகும்.


சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் : இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்யும். கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையையும் சீராக்கும்.


வளர்சிதை ஆற்றல் அதிகரிக்கும் : உடல் பாகங்கள் சரியான முறையில் இயங்கத் தொடங்கினாலே வளர்சிதை மாற்றங்கள் சீராக நிகழும். அதற்கு யோகா சரியான பயிற்சியாக இருக்கும்.


இரத்த ஓட்டம் அதிகரிக்கும் : ஓய்வான மற்றும் அமைதியான யோகா முறையால் இரத்த ஓட்டும் ஒவ்வொரு பாகங்களுக்கும் சீராகச் செலுத்தப்படும். இதனால் இதயமும் நன்கு இயங்கும். image source : shutter stock


நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : இரத்த ஓட்டம் சீராக இயங்கினாலே நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதனால் நோய்த் தொற்றுகள் வராமல் நோய் நொடியின்றி வாழலாம்.


உற்சாகம் பிறக்கும் : தினமும் யோகா பயிற்சி மேற்கொண்டால் உங்களுக்குள் புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் கிடைக்கும். இதனால் உங்களை நீங்களே புதிதாகக் காண்பீர்கள்.


நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும் : இதில் அதிகமான மூச்சுப் பயிற்சி இருப்பதால் நுரையீரல் செயல்பாடு வேகமாக இருக்கும்.