”பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’’ என்பது பழமொழி. அந்த அளவுக்கு உணவு என்பது நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பத்தும் பறந்து போகும் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ள நம் மக்கள் சிலர், கண்ணில் தென்படும் தின்பண்டங்களை எல்லாம் அள்ளிக் கொட்டிக் கொண்டு செரிமானக் கோளாறுகளை தானே வரவழைத்துக் கொள்கின்றனர்.
பப்பாளி : தினசரி பப்பாளி உண்பதன் மூலமாக உங்கள் செரிமான சக்தி பெரிய அளவுக்கு மேம்படும். நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் பப்பாளியில் நிரம்பியுள்ளன. உணவை செரிமானம் செய்ய பப்பாளி உதவுவதோடு மட்டுமல்லாமல், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆப்பிள் : உணவுகளை எளிதாக செரிமானம் செய்ய வைக்க நீங்கள் ஆப்பிள் பழத்தையும் எடுத்துக் கொள்ளலாம். வாயு தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சக்தி ஆப்பிளில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் புரதம், நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள ஆப்பிள் பழங்களை உண்பதால் நம் உடலுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும்.