தூக்கம் என்பது மனிதனுக்கான வரம் என்பதை உணர்த்துவதுதான் இந்த நாளின் நோக்கம் ஆகும். இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்குதல் போன்ற காரணங்களால் நிம்மதியான உறக்கம் கெட்டுவிடக் கூடாது என்பது இந்நாளின் நோக்கமாக உள்ளது. குறிப்பாக தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
பொதுவாக நம் முதுகு கீழாக இருக்கும்படி, அதாவது மல்லாக்க படுத்து உறங்குவது சிறப்பானதாக அமையும். இதை ‘சவாஸனா’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த முறையில் தூங்கும்போது உங்கள் முதுகு தண்டுவடம் நேர்கோட்டில் இருக்கிறது மற்றும் உடல் எடை அழுத்தம் சீராக இருக்கிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க இது உதவும்.
ஒரு பக்கமாக தூங்குவது : நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட பொசிஷன் இதுவாகும். அதிலும் இடதுபக்கமாக தலை சாய்ந்து தூங்குவது நல்ல பலனை தரும். ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது சௌகரியத்தை தரும். அது மட்டுமல்லாமல் கழுத்து வலி, இடுப்பு வலி, தோள் வலி போன்றவை வராது.
குப்புற படுத்து தூங்குவது : தூங்கும்போது மூச்சு விடுவதற்கு சிரமம் கொண்டவர்கள் அல்லது குறட்டை பிரச்சினையால் அவதி அடைபவர்கள் இந்த பொசிஷனை முயற்சி செய்யலாம். ஏனெனில் மூச்சுக்குழாய் நேர்கோட்டில் இயங்குவதால் சுமூகமான தூக்கத்தை உறுதி செய்யலாம். ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்கள் இந்த பொசிஷனை முயற்சி செய்யக் கூடாது.