ஒருவருக்கு பார்கின்சன் நோய் தீவிரமாகும் போது அவரின் இயல்பான செயல்களான நிற்பது, நடப்பது, உடலை பேலன்ஸ் செய்வது, பொருட்களை கையாள்வது என பல தினசரி மற்றும் சாதாரண செயல்கள் கூட பாதிக்கப்படும். சுருக்கமாக சொன்னால் PD என்பது ஒருவரின் இயக்கங்களை (Movements) பாதிக்கும் ஒரு மூளை கோளாறு ஆகும். பார்கின்சன் நோயை முற்றிலும் குணப்படுத்த குறிப்பிடத்தக்க சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் டான்ஸ் மற்றும் மியூசிக் கேட்பது பார்கின்சன் நோய் நிலை தீவிரமாவதை குறைக்கும் என உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன.
ரிதம், மூவ்மென்ட், வாய்ஸ் மற்றும் கிரியேட்டிவிட்டி உள்ளிட்டவை அடங்கிய மியூசிக் தெரபி மூளையின் செயல்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம் உணர்ச்சிகள், இயக்கங்கள் மற்றும் தகவல் தொடர்புகளை மாற்றியமைக்க உதவுகிறது. மும்பையை தளமாகக் கொண்ட ஜஸ்லோக் மருத்துவமனை PD-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க இசை மற்றும் நடனம் எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ள ஒரு பைலட் அடிப்படையிலான ஆய்வை அறிவித்தது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் பரேஷ் தோஷி பேசுகையில், நரம்பியல் இயக்க கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்க மியூசிக்கின் பவரை பயன்படுத்துவதில் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
டான்ஸ் ஆடுவது மற்றும் மியூசிக் கேட்பது PD கோளாறின் முன்னேற்றத்தை குறைக்கும் என உலகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே இந்த ஆய்வு ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளில் இருந்து எவ்வாறு வேறுபடும்..? என்ற கேள்விக்கு பதிலளித்தார் பரேஷ் தோஷி. அவர் கூறியதாவது, முந்தைய ஆய்வுகள் கட்டுப்பாட்டுக் குழுக்களை (control groups) கொண்டிருக்கவில்லை அல்லது Structured treatment-ன் ஒரு பகுதியாக மெடிட்டேஷனை சேர்க்கவில்லை. நாங்கள் PD-ன் பல உளவியல் மற்றும் அறிவாற்றல் அம்சங்களை மதிப்பீடு செய்து வருகிறோம், இதற்கு முன் இவை மதிப்பீடு செய்யப்பட்டதில்லை. எங்கள் ஆய்வின் மற்றொரு முக்கியமான அம்சம் நாங்கள் Caretakers-ஐ ஈடுபடுத்துகிறோம். PD நோய்க்கான மேலாண்மை உத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களுக்கு இந்த சிகிச்சையின் தாக்கத்தை மதிப்பிடுகிறோம் என்றார்.
எது இந்த ஆய்வை மேற்கொள்ள தூண்டியது என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் பரேஷ், PD குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல வெபினார்களை நடத்துகிறோம். அப்போதெல்லாம் என் நோயின் தீவிரத்தை தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாதா? என்ற கேள்வியை நோயாளிகள் என்னிடம் எழுப்புவார்கள். எனவே சாத்தியமான பதிலை அவர்களிடம் சொல்லும் முன் அதனை விஞ்ஞான ரீதியாக மதிப்பீடு செய்ய நினைத்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் எங்களது ஆய்வுப் பிரிவில் 15 நோயாளிகளும், 22 முதல் 80 வயதுக்குட்பட்ட 15 நோயாளிகளும் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருப்பார்கள். மியூசிக் தெரபி என்பது உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதற்கு இசை மற்றும் ஒலிகளை பயன்படுத்துவது என வரையறுக்கப்படுகிறது. மியூசிக் அடிப்படையிலான பிஸிக்கல் தெரபி ப்ரோகிராம், PD நோயாளிகளில் சமநிலை மற்றும் செயல்பாட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது என்பதை சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியது என்றார்.
முழுமையான சோதனை முடிவுகளை பெற்றவுடன் அடுத்த கட்டமாக இதை மிகப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல நாடு முழுவதும்இருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை சேர்க்க விரும்புகிறோம் எனவும் கூறினார். அதே போல Deep brain stimulation surgery-க்கு உட்பட்ட நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்த பல நிரலாக்க முறைகளின் தாக்கத்தை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம் என்றார்.