உலக சிறுநீரக தினம் 2022 இன்று (மார்ச் 10) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ஒரு சிறப்பு கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது. இம்முறை கருப்பொருள் 'அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்'. இந்நாளில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சிறுநீரகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படுகிறது. சிறுநீரகத்தின் வேலை : சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான உறுப்பு, இது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை வெளியேற்றுகிறது. இது வேறு பல செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. World Kidney day- இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது மிகவும் பொதுவானது மற்றும் தீங்கு விளைவிக்கும் நோயாக கருதப்படுகிறது. உலகளவில், ஒவ்வொரு 10 பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவர் இறந்துவிடலாம். சிறுநீரக நோய் தொடர்பான இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2040 இல் இறப்புக்கான 5 வது முக்கிய காரணியாக இது இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். சைலண்ட் கில்லர் எனப்படும் சிறுநீரக நோய், உங்கள் வாழ்க்கைத் தரத்தை பெரிய அளவில் பாதிக்கும். எனவே சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம். சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் வாழ்க்கைமுறை பழக்கங்கள் : * நீங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும். இதற்காக நீங்கள் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். புகையிலை பயன்பாட்டை தவிருங்கள். * உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் ரீதியாக எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு எடை கட்டுக்குள் இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு நாள்பட்ட சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும். நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். World Kidney Day 2022 : சிறுநீரக கற்கள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க பயனுள்ள டிப்ஸ்..! * ஆரோக்கியமான உணவு உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நீரிழிவு, இதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயை மோசமாக்கும் பிற சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. * உங்கள் உணவில் அதிக உப்பு சேர்க்க வேண்டாம். தினமும் 5-6 கிராம் சோடியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெளி உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள். இதைச் செய்வதன் மூலம் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். * நீங்கள் சிறுநீரக நோயிலிருந்து விலகி இருக்க விரும்பினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும். கவனக்குறைவு காரணமாக நீரிழிவு நோயில் இரத்த அழுத்த பிரச்சனை அடிக்கடி அதிகரிக்கிறது. பொது உடல் பரிசோதனையிலும் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொண்டே இருங்கள். * நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதிக கொலஸ்ட்ரால், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களை கட்டுப்பாட்டில் வைக்கப்படாவிட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.