டென்ஷனா இருக்கு என்று கூறுவது, சட்டென்று மன நிலையில் அதீத மாற்றங்கள், எரிந்து விழுவது, கட்டுப்படுத்த முடியாத கோபம், இதெல்லாம் அவ்வபோது ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால், இதற்கு தான், இந்த விஷயம் தான் இன்று இல்லாமல் எல்லாவற்றுக்கும் அதிகமான கோபமும் படபடப்பும் டென்ஷன் ஆன நிலையும் உங்களுக்கு அதிக BP இருப்பதை குறிக்கிறது. உலகம் முழுவதிலுமே நீரிழிவு நோய் எவ்வாறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதோ, அதே போல ரத்த அழுத்த உயர்வும் உடலில் தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. மேலும், உயர் ரத்த அழுத்தமே ஒரு நோயாக கருதி அதற்கு சிகிச்சைகளும் மருந்துகளும் அளிக்கும் அளவுக்கு ஆபத்தாக இருக்கிறது.
பலருக்கும் உயர் ரத்த அழுத்த அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக ஹைப்பர்டென்ஷன் தினம் என்ற ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள், எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி விவரங்கள் உலகம் முழுவதிலும் பகிரப்பட்டு வருகிறது. ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன்.
நம்முடைய மனநிலையை அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உயர் ரத்த அழுத்தத்திற்கு பிரத்யேகமான அறிகுறிகள் கிடையாது. தலைவலி காலையில் எழுந்து கொள்ளும் போது நிதானமின்மை, படப்படப்பாக உணர்வது ஆகியவை பல உடல் நலக் குறைபாடுகளுடன் தொடர்புடையது. இருப்பினும், தலை முதல் கால் வரை, சில குறிப்பிட்ட உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள் இருக்கின்றன. நீங்கள் ஹைப்பர் டென்ஷனால் பாதிகப்பட்டுள்ளீர்களா என்பதை இந்த அறிகுறிகள் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
காலையில் கண்விழிக்கும் போதே தலைவலி : காலையில் எழுந்து கொள்ளும் போதே உங்களுக்கு தலைவலி இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கான ஒரு அறிகுறி ஆகும். சிலருக்கு இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை அல்லது தொடர்ச்சியான தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், காலையில் எழுந்து கொள்ளும் போது தலைவலி இருக்கும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் இருந்தால் காலை நேரத் தலைவலியை தவிர்க்கவே முடியாது.
மூக்கிலிருந்து ரத்தம் வடிவது : அறிகுறிகளே இல்லாததால் ஹைபர் டென்ஷன் பல நேரங்களில் உயிர் கொல்லியாக மாறுகிறது. முகத்தில் அல்லது மண்டையில் தீவிரமான காயம் அல்லது தாக்குதல் ஏற்பட்டால் தான் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். ஆனால், எந்த காரணமும் இன்றி இவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் உங்கள் ரத்த அழுத்த அளவுகளை உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.
இதயத் துடிப்பு அதிகரிப்பு : ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது உடலுக்கு தேவையான ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் சப்ளை நிச்சயமாக தடைப்படும். சில நேரங்களில் இதனால் இதயம் அதிவேகமாக வழக்கத்தை விட வேகமாக துடிக்கும். ஹைபர் டென்ஷன் நோயாளிகளுக்கு அரித்மியா எனப்படும் இதய நோய் பாதிப்பும் உள்ளது. சில நேரங்களில் கவனிக்கப்படாத ஹைப்பர் டென்ஷனால் இதயம் செயலிழந்து போகும்.