முட்டை நல்ல கொழுப்பின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. அடிப்படையில், நம் உடலுக்கு சூரியக் கதிர்களிடமிருந்து வைட்டமின்-டி சத்துக் கிடைக்கிறது. ஆனால் உணவு என்று பார்த்தால் வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகள் மிகக் குறைவு. அதில் அரிதான வைட்டமின்- டி சத்து கொண்ட உணவுதான் முட்டை மஞ்சள் கரு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் சிறந்தது.