உலக ஆஸ்துமா தினம் 2023 : சில நேரங்களில் அதிக கூட்டம் உள்ள இடங்களிலோ அல்லது நெரிசல் உள்ள இடங்களிலோ சென்றால் ஒருவிதமான மூச்சு திணறல் எல்லோருக்கும் ஏற்படும். இதுவே ஆஸ்துமா வந்தவர்களுக்கு இந்த நிலை மிக மோசமானதாக இருக்கும். ஒரு சில நொடிகள் மூச்சு திணறல் ஏற்பட்டாலே நம்மால் கொஞ்சம் கூட தாங்கி கொள்ள முடியாது. ஆனால் ஆஸ்துமா உள்ளவர்கள் பல ஆண்டுகளாக இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். எதனால் ஆஸ்துமா வருகிறது, இதன் அறிகுறிகள் என்னென்ன, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பற்றி முழுவதுமாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆஸ்துமா பாதிப்பு : ஆஸ்துமா வந்துவிட்டால் ஒருவரில் நுரையீரலானது சுருங்கி, வீக்கம் அடைய செய்யும். மேலும் அதிக சளியை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கலாம். தூசு, வறண்ட காற்று, புகை போன்றவற்றிற்கு உங்கள் நுரையீரலில் உள்ள தசைகள் அதிக இறுக்கம் பெற்று மூச்சு குழாயானது வீக்கம் அடைந்து விடும். இந்த நிலையை தான் ஆஸ்துமா அட்டாக் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறிய அளவில் ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் நெபுலைசர் மற்றும் இன்ஹேலர் உதவியுடன் இந்த பாதிப்பை குறைக்காலம். அதி தீவிரமான ஆஸ்துமா பாதிப்பு என்பது நீண்ட கால உடல் நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக ஒருவருக்கு நீண்ட காலமாக ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, புகை பழக்கம் ஆகியவற்றால் தீவிர ஆஸ்துமா ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிக்கல் : உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டால் அது தான் ஆஸ்துமாவிற்கான முதல் அறிகுறியாகும். மூச்சு குழாய்களை வீக்கம் அடைய செய்வதாலும், அவை சுருங்கி விடுவதாலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நுரையீரலுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாது. எனவே மூச்சு திணறல் வருகிறது.
மூச்சுத்திணறல் : ஆஸ்துமாவால் ஒருவரில் நுரையீரல் பகுதியில் உள்ள மூச்சு குழாய்கள் சுருங்கி விடுவதாலும், வீக்கமடைவதாலும் போதுமான ஆக்சிஜனை சுவாசிக்க முடிவதில்லை. இதனால் மூச்சு திணறல் ஏற்படும் போது சத்தமும் உண்டாகுகிறது. இந்த நிலை தீவிரமடைந்தால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருமல் : பொதுவாக வெளியில் உள்ள தூசு, புகை, சிறிய துகள்கள் போன்றவை மூச்சு குழாயில் படும்போது ஒருவித எரிச்சல் உணர்வை அந்த பாதையில் ஏற்படுத்தும். உங்கள் மார்பு மற்றும் வயிற்றில் உள்ள தசைகள் உங்கள் நுரையீரலில் இருந்து காற்றை வெளியேற்ற உங்கள் மூளைக்கு சமிக்ஞை செய்யும் நரம்புகளைத் தூண்டுகிறது. இதனால் இரும்பல் ஏற்படுகிறது. இதுவே அதிகம் அடைந்தால் ஆஸ்துமா அட்டாக்காக மாறுகிறது.
நெஞ்சு இறுக்கம் : போதுமான அளவு காற்றை சுவாசிக்க முடிவில்லை என்றால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இதனால் நெஞ்சு இறுக்கம் அடையும். மார்பு வீங்கியதாகவோ அல்லது காற்றினால் அழுத்தம் தருவதாகவோ உணரலாம். நுரையீரலில் காற்று சிக்கிக்கொண்டாலோ, நீங்கள் நன்றாக சுவாசிக்கவோ அல்லது வெளியிடும்போது இவ்வாறு ஏற்படுகிறது.