குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு தாய்மார்கள் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. உடல் சோர்வடைவதோடு, சில பெண்கள் குண்டாகி விடுகிறார்கள்.இதோடு சில பெண்களுக்க வயிற்று தசைகள் தளர்ந்து விடுகிறது. இதோடு சரியான தூக்கம் இல்லாத காரணத்தினாலும் பெண்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பிரசவத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு பெண்களும் குழந்தைப் பிறப்பிற்கு பிறகு உரிய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்..
பிரசவத்திற்கு பிந்தைய உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்.. : பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்று. இதோடு நீங்கள் செய்யும் பயிற்சிகள் மனநிலையை புத்துணர்ச்சியாக வைப்பதற்கு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமான தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்கிறது. இது வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை சமநிலைப் படுத்துவதற்கு உதவியாக உள்ளது. குறிப்பாக கார்டியோ, வலிமை பயிற்சி, குறைந்த தீவிர ஏரோபிக்ஸ் ஆகியவற்றை இணைக்கும் பயிற்சிகள் புதிய தாய்மார்களுக்கு வலுவான தசைகளை உருவாக்கவும் உதவியாக உள்ளது. சிறந்த தூக்க்த்தை வழங்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியாக உள்ளது. பிரசவத்திற்கு பிந்தைய பயனுள்ள உடற்பயிற்சிகள் சிலவை..
இடுப்பு மடி பயிற்சிகள் (Pelvic Floor Exercises) : குழந்தைப் பிறப்பிற்கு பிறகு ஒவ்வொரு தாய்மார்களுக்கும் இடுப்பு வலி அதிகமாக இருக்கும். இதோடு உடல் எடையும் அதிகரிக்கும் போது அதிக நேரம் நிற்கவே முடியாது. இந்நேரத்தில் இந்த பயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. எனவே இடுப்புத்தளப் பயிற்சிகளான planks, side-planks leg-lifts, Cat-Cow table tops, glute bridges போன்ற பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
நடைபயிற்சி : உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், வலிமையோடு இருப்பதற்கும் நடைபயிற்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நீங்கள் காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இரத்த- ஆக்ஸிஜனேற்ற அளவை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இது தாய்மார்களுக்கு சிறந்த ஆற்றல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியாக உள்ளது.
பிரசவத்திற்கு பிந்தைய யோகா : நீங்கள் குழந்தை பிறப்பிற்கு பிறகு உங்களது வழக்கமான ஆசனங்களை செய்யலாம். அதற்கு முன்னதாக நீங்கள் சுகப்பிரசவம் என்றால் சில நாள்களுக்கு உள்ளாகவே நீங்கள் ஆரம்பிக்கலாம். ஒருவேளை சிசேரியன் என்றால் மருத்துவரின் அறிவுரையின் பேரில் ஆரம்பிக்கவும்.இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களது மன நிம்மதியை அளிப்பதோடு, தேவையில்லாத எரிச்சல் மற்றும் கோபத்தைக்குறைக்க உதவியாக உள்ளது. மேலும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை அனுபவிக்கும் அம்மாக்களுக்கு நல்ல பலனளிக்கும்.
பிராணாயாமம் : தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய காலம் மிகவும் சவாலானது. குறிப்பாக கடுமையான மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, பதட்டம் மற்றும் பிற உளவியல் சிக்கல்களால் அவர்கள் பாதிக்கக்கூடும். எனவே மனதை ஒருநிலைப் படுத்த யோகாவின் பல்வேறு சுவாசப் பயிற்சிகள் தாய்மார்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகின்றன, மேலும் குழந்தைக்குத் தேவையான அமைதி மற்றும் அமைதியின் உணர்வை வழங்குவதாக அமைகிறது.