முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எடை அதே டைப் 2-ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் ஒத்த வயதுடைய ஆண்களை விட அதிகமாக இருக்கும்.

 • 18

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  சர்க்கரை நோய் உள்ள ஆண்களை விட, சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோயின் முன்னேற்றத்திற்கு இடையே ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  ஏற்கனவே மேலே குறிப்பிடப்படி இந்த புதிய ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, பெண்களுக்கு இதய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமீபத்தில் 2023-ஆம் ஆண்டு Diabetes UK Professional Conference-ல் வழங்கப்பட்ட ஆய்வு முடிவில், நீரிழிவு நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில், டைப் 2 நீரிழிவு கொண்ட பெண்களுக்கு இதய சிக்கல்கள் உருவாகும் அபாயம் 20% அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  நீரிழிவு நோயாளிகளின் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணம்: நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக காணப்படும் பல சிக்கல்களில் இதய நோய்கள் என்பவை மிகவும் பொதுவானவை மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவையாகவும் இருக்கின்றன. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில், இதனால் பாதிக்கப்பட பெண்களுக்கு இதய கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12% அதிகம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இது தொடர்பாக கருத்து கூறி இருக்கும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னதாகவே ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், இது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 48

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  ஆபத்து காரணியாக இருக்கும் அதிக எடை: டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில், டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மட்டும் அதிக கொலஸ்ட்ரால் லெவலை கொண்டவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எடை அதே டைப் 2-ஆல் பாதிக்கப்பட்ட மற்றும் ஒத்த வயதுடைய ஆண்களை விட அதிகமாக இருக்கும். மான்செஸ்டர் ராயல் மருத்துவமனையின் மருத்துவ பேராசிரியரான மார்ட்டின் ரட்டர் கூறுகையில், இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியடும் பெண்களின் எடை ஆண்களை விட சராசரியாக 24 கிலோ அதிகமாக இருக்கும் என்கிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  அதே போல மருத்துவ சிகிச்சையை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களை விட பெண்கள் உயிருக்கு ஆபத்தான இந்த சிக்கலுக்கு ஆளாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Lipid-lowering மருந்துகள் மற்றும் Angiotensin-converting enzyme inhibitors பரிந்துரைக்கப்படுவது குறைவு, குறிப்பாக அவர்களுக்கு இருதய நோய் இருந்தால் என ஆய்வு கூறுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, பெண்கள் இதயப் பிரச்சினைகளுக்கு தீவிர சிகிச்சை பெறுவது குறைவு மற்றும் பல பெண்கள் Cardiac procedures-களுக்கு கூட பரிந்துரைக்கப்படுவதில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  செய்ய வேண்டியது என்ன? ஒருவர் நீரிழிவு நோயின் அறிகுறிகளை அறிந்து வைத்து கொள்வது மிகவும் முக்கியமானது, இதனால் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டவுடன் விரைந்து மருத்துவரிடம் சென்று சிகிச்சையை துவக்க முடியும். நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளில் திடீர் எடை இழப்பு, அதிக பசி மற்றும் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அந்தரங்க பகுதியில் மீண்டும் மீண்டும் தொற்று, மங்கலான பார்வை, தாடை, முதுகு அல்லது கழுத்தில் வலி மற்றும் கை மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்டவை அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்

  யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? நீரிழிவு நோய் கொண்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், அதிக எடை அல்லது உடல் பருமனானவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பத்திற்குப் பிறகு எடை அதிகரித்தவர்கள், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் மற்றும் உயர் ரத்த அழுத்தம், ஹை ட்ரைகிளிசரைட்ஸ் மற்றும் குறைந்த HDL உள்ளவர்கள் நீரிழிவு னாய் குறித்து கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES