அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது “ பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் முதுகுவலி காரணமாக அடிக்கடி சிகிச்சைக்காக வரும் நோயாளி. அப்படி ஒரு முறை வந்த போது அவருடைய மனைவியும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவரை கவனித்த போது மூக்கும், உதடும் இயல்பைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. அவர் என்னை பார்த்து சிரித்த போது பற்களின் வரிசையில் அதிக இடைவெளிகள் இருந்ததையும் கவனித்தேன். அவரின் குரலும் கொரகொரப்பாக இருந்தது. கணத்த குரலாகவும் இருந்தது.
நான் அவருக்கு மூளையில் ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என சந்தேகித்தேன். பின் அவரிடம் சமீப நாட்களில் உங்கள் ஷூ சைஸ் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டேன். அந்த பெண் ஆச்சரியமாக ஆமாம் டாக்டர் எப்படி சரியாக கண்டறிந்தீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் ஷூ சைஸ் 5 -லிருந்து 7 -ஆக மாறியுள்ளது. ஏன் டாக்டர் வயதாக வயதாக கால் வளர்ச்சியடையாதா..? என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
பின் அந்த பெண்ணை இரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார். பின் அந்த பரிசோதனையை கவனித்த போது growth factor 1 (IGF 1) மிக அதிகமாக உயர்ந்து காணப்பட்டுள்ளது. அதாவது வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தி என்பது அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. இது குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை உடல் உறுப்பு வளர்ச்சிக்கு உதவும். பின் சதை , எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த , நகம் , முடி வளர்ச்சிக்கு உற்பத்தியாகும்.
இது குறித்து மருத்துவர் “ அவ்வாறு ஹார்மோன் அதிகரிப்புக்கு காரணம் மூளையிலிருந்து pituitary gland பிரிக்கப்படுவதே காரணம் என்கிறார். இந்த pituitary gland என்பதை தமிழில் மூளையடிச் சுரப்பி என்று அழைக்கின்றனர். இது உடல் வளர்ச்சியிலும் பாலியல் செயற்பாடுகளிலும் தாக்கத்தை/மாற்ற விளைவை ஏற்படுத்துகிற ஊக்கு நீரை உற்பத்தி செய்யும் உறுப்பு. இது, மூளையின் அடிப்பகுதியிலுள்ள சிறு உறுப்பாகும்.
பின் அந்த பெண்ணை மூளைக்கு எம். ஆர்.ஐ எடுக்க சொல்லியிருக்கிறார். பின் அதன் மூலம் அந்த பெண்ணுக்கு மூளையில் pituitary adenoma என்னும் தீங்கு விளைவிக்கக் கூடிய கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளார். பின் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையை திறக்காமல் மூக்கின் வழியாக அந்த கட்டி நீக்கப்பட்டது. இதனால் இப்போது அந்த பெண் தீவிரமான பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தில் இப்போது இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இப்போது அவர்களின் முக அமைப்பு, மூக்கு, நாக்கு மற்றும் பேச்சு அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 12 வாரங்களுக்குப் பின் அவருடைய ஹார்மோன் அளவு சீராகியுள்ளது. இப்போது அவருக்கு மிதமான சர்க்கரை நோய் இருப்பதால் அதற்கு மட்டும் மாத்திரைகள் எடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார் மருத்துவர்.
இறுதியாக மருத்துவர் செய்த எச்சரிக்கையில் “ இந்த பெண்ணிற்கு நிகழ்ந்ததுபோல் உங்களுக்கும் காலணி அளவு அதாவது காலின் அளவு அதிகரித்துள்ளது அல்லது முகத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறது எனில் அது acromegaly எனப்படும் வளர்ச்சிக்கான ஹார்மோன் அதிகரிப்பின் காரணமாக இருக்கலாம். இதை எளிதாக இரத்தப் பரிசோதனையிலேயே ஆரம்பத்தில் யூகிக்க முடியும். ஆரம்பகால சிகிச்சையால் இதை கட்டுப்படுத்த முடியும். ஆபத்தான பாதிப்புகள் இல்லாமல் தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார் மருத்துவர் சுதிர் குமார்.