

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிகழும் மாதவிடாயின் போது உதிரும் இரத்தப்போக்கை வைத்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். இதை American College of Obstetricians and Gynecologists ஆய்வு செய்து வெளியிட்டது. அவை என்னென்ன பார்க்கலாம்.


வெளிர் சிவப்பு நிறம் : வெளிர் சிவப்பு நிறம் என்பது பொதுவாக உதிரும் நிறம்தான். இந்த நிறத்தில் இரத்தம் வெளியேறினால் அது ஆரோக்கியமான மாதவிடாய் நிறம் என்று கூறப்படுகிறது.


பிங்க் நிறம் : இது சிவப்பு கலந்த பிங்க் நிறத்தில் இருக்கும். இப்படி இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதை குறிக்கும். அதேபோல் உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் இந்த நிறத்தில் இருக்கும்.


அடர் சிவப்பு : அடர் சிவப்பு நிறத்தில் கட்டி கட்டியாக உதிர்ந்தால் ஈட்ரோஜன் அளவு அதிகமாகவும், புரோகெஸ்டரோன் அளவு குறைந்து இருப்பதையும் குறிக்கும். கட்டிகள் சிறிதாக இருந்தால் பிரச்னையில்லை. அதுவே பெரிய அளவில் இருந்தால் மருத்துவரை அணுகுதல் நல்லது. இது ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கும்.


கிரே மற்றும் சிவப்பு : இது பலருக்கும் வராது. அப்படி வந்தால் தேங்கியிருந்த பழைய இரத்தமாக இருக்கும். இல்லையெனில் பாலியல் தொற்று இருந்தால் இந்த நிறத்தில் உதிரும். கிரே நிறத்தில் இருந்தால் நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள் அல்லது கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும் அறிகுறியாகும். இந்த நிறம்தான் என தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது.


கருச்சிவப்பு நிறம் ( brown) : பொதுவாக இந்த நிறமானது மாதவிடாய் நிற்கும் இறுதி நாட்களில் உதிரும். முதல் 3 நாட்கள் வெளிர் சிவப்பு நிறத்திலும் இறுதி நாட்களில் இந்த அடர் கருச்சிவப்பு நிறத்தில் வெளியேறுவது இயல்புதான். கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டாலும் இந்த நிறத்தில் வரும். பெரிய கட்டிகளாக உதிர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.