முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமிகளை அகற்றவோ அல்லது வடிகட்டி தடுக்கவோ தேவையான அமைப்புகள் வாயில் இல்லை. அதனால் வாய் வழியாக நாம் சுவாசித்தால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிவிடுவோம்.

 • 17

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  நாம் உயிர் வாழ்வதற்கு சுவாசிப்பது மிக முக்கியமான ஒன்று. எனவே நிமிடத்திற்கு நிமிடம் நாம் சுவாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையாக இருந்தாலும், அதில் தூசு, வைரஸ்கள், பூஞ்சைகள் உள்ளிட்டவை இருக்கலாம். அவை நாம் சுவாசிக்கும்போது நம்முடைய சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் கலந்துவிடுகின்றன. இதனால் பதற்றம் அடைய வேண்டாம். நமது சுவாச அமைப்புக்கு அவற்றை எப்படி சுத்தம் செய்வது, தன்னை பாதுகாப்பது என தெரியும்.

  MORE
  GALLERIES

 • 27

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  உண்மையில், 3 முதல் 5 மைக்ரான் வரை விட்டம் கொண்ட சிறுதுகள்களே நுரையீரலை சென்றடையும். மற்ற மாசுக்கள் நம் நுரையீரலுக்குள் நுழையாமல் சுவாச அமைப்பு தடுக்கிறது? இந்த வேலையை சிலியா (cilia) எனப்படும் ‘சூப்பர் ஹீரோக்களே செய்கின்றன. சிலியா என்பது நம் செல்களின் மேற்பரப்பில் காணப்படும் முடி போன்ற, ஊசிமுனையை விட மிகச்சிறிய அமைப்பாகும்.

  MORE
  GALLERIES

 • 37

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  நமது சுவாசக்குழாயில் உள்ள மியூக்கஸ் (mucus) எனப்படும் சளி சவ்வில் இந்த சிலியா ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. மூக்கு, மூச்சுக்குழாயில் உள்ள மியூக்கஸின் ஒவ்வொரு செல்லிலும் 25 முதல் 30 சிலியாக்கள் உள்ளன. அதன் சராசரி நீளம் 5 முதல் 7 மைக்ரான்களாகும். செல்களில் நீட்டிக்கொண்டிருக்கும் இந்த சிலியாக்கள், தூரிகையை நகர்த்தும்போது அதன் முட்கள் அசைவது போல நகர்ந்துகொண்டிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  இந்த செயல் மூலம், மூக்கில் நுழையும் 0.5 மில்லிமீட்டர்கள் வரை விட்டம் கொண்ட துகள்கள் குரல்வளைக்கு இழுக்கப்பட்டு, அந்த துகள்கள் வெறும் 10 முதல் 15 நிமிடங்களிலேயே மூக்குப் பகுதியிலிருந்து முற்றிலும் அகற்றப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை அவை அசைகின்றன. இதனால், அவை சுவாசக் குழாயில் உள்ள மியூக்கஸை மேல் நோக்கித் தள்ளுகிறது. இதன்மூலம் மியூக்கஸில் நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் மற்றும் துகள்களை சிக்க வைக்கிறது. இதனால் மூச்சுக்குழாயில் உள்ள தொற்றுகள் அகற்றப்படுகின்றன. இப்படி நாம் சுவாசிக்கும் காற்றை வடிகட்டி சுத்தம் செய்யும் வேலையை மூக்கு கச்சதிமாக செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஆனால் வாயில் இதற்கான அமைப்புகள் இல்லை. நம்முடைய வாய் திட மற்றும் திரவ உணவுகள் நுழைவதற்கான ஒரு நுழைவுப்பகுதி. வாய்ப்பகுதியில் உள்ள மியூக்கோஸா வேறு மாதிரியான அம்சங்களை கொண்டவை. மேலும், காற்றை வடிகட்டும் சிலியா அதில் இல்லை. நாம் உண்ணும் உணவின் வழியாக உள்ளே நுழையும் கிருமிகளை தடுப்பதே வாயின் செயல்பாடாகும்.

  MORE
  GALLERIES

 • 67

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  எப்படி நாம் மூக்கின் வழியாக உணவை சாப்பிடுவதில்லையோ, அதேபோன்று வாய் வழியாக சுவாசிக்கவும் கூடாது. வாய் வழியாக மூச்சுவிடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனால், குழந்தைகளின் முகத்தில் உள்ள எலும்புகளின் அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். குழந்தைகளுக்கு இதனால் முக எலும்புகளின் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் மேலோக்ளூஷன் எனப்படும் மேல்பல் - கீழ்ப்பல் பொருந்தாமை உள்ளிட்ட  பாதிப்புகள் ஏற்படலாம்  என ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 77

  வாய் வழியாக சுவாசிப்பது ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  அதோடு வாய் வழி சுவாசத்தால் சிலருக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஏற்படலாம். தொடர்ந்து வாய் வழி சுவாசம் செய்தால் நம் தொண்டையின் உள்நாக்கின் (Adenoid) மேல் பகுதி கெட்டித்து போக வாய்ப்புள்ளது. உள்நாக்கு வளர்ச்சி ஏற்பட்டு பல்வேறு தொல்லைகள் வரும். ஆஸ்துமா ஏற்படக் கூட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இதெல்லாவற்றையும் விட தொடர்ந்து  வாய் வழியாக சுவாசிப்பவர்கள் விரைவில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுவார்களாம்.. எனவே வாய் வழியாக சுவாசிப்பதை நிறுத்துவோம். மூக்கின் வழியாக மட்டும் சுவாசிப்போம்.

  MORE
  GALLERIES