அமெரிக்காவின் ஹார்வார்டு மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தி முடித்துள்ளது. பெண்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்வதில் இயற்கையின் பங்களிப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி நிகழுகிறது என்பதற்கு பலரிடமும் மிகச் சரியான பதில் இல்லை என்றாலும் கூட, அதற்கான காரணங்களாக சில விஷயங்களை ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வைக்கிறது.
கருவிலேயே வேறுபாடு : ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுகள் கருவிலேயே தொடங்கி விடுகிறதாம். மனித உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ள நிலையில், அதில் 22 ஜோடி குரோமோசோம்கள் இரு பாலினத்தவருக்கும் ஒரே மாதிரியானவை தான். இருவருக்கும் வேறுபடுகின்ற 23ஆவது ஜோடி குரோமோசோம் தான் ஆண் என்பதையும், பெண் என்பதையும் தீர்மானிக்கிறது. 23ஆவது ஜோடியாக எக்ஸ் மற்றும் ஒய் கொண்டுள்ளவர்கள் ஆணாகவும், இரண்டுமே எக்ஸ் கொண்டுள்ளவர்கள் பெண்ணாகவும் பிறக்கின்றனர்.
இனப்பெருக்க உறுப்பு : ஆண்களிடம் உள்ள புரோஸ்டேட் சுரப்பி என்பது பல நோய்களுக்கான பிறப்பிடமாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவை வருகின்றன. இந்த விவகாரத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கொஞ்சம் பாதுகாப்பானவர்கள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், பிற வகைகளில் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படுகின்ற அபாயம் அதிகம் உள்ளது.