முன் தயாரிப்பு மற்றும் ஓய்வு அவசியம் : கடுமையான பயிற்சிகளை செய்யும் முன்பாக நம் உடலை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதனை Warm Up என்று சொல்கின்றனர். இவ்வாறு உடலை முன்கூட்டியே தயார் செய்யாமல் பயிற்சியில் ஈடுபடும் பட்சத்தில் தசைப்பிடிப்பு, உடல் வலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேபோல உடற்பயிற்சியை செய்து முடித்தவுடன் சட்டென்று அடுத்த வேலைக்கு தாவி விடக் கூடாது. ஏனென்றால் கடும் சிரமத்தை எதிர்கொண்ட நம் உடலுக்கு ஓய்வு அவசியம் ஆகும். அதனை Cool Down என்று குறிப்பிடுகின்றனர். ஏதேனும் காயங்கள் ஏற்படுவதை தடுக்க இது அவசியமாகிறது. உடற்பயிற்சியின்போது அதி வேகத்தில் இருக்கின்ற ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இது உதவுகிறது.
எவ்வளவு சத்து தேவைப்படும்? சாதாரணமாக உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இது ஒவ்வொரு நபர் மற்றும் அவர் செய்கின்ற பயிற்சியை பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு எவ்வளவு ஊட்டச்சத்து தேவைப்படும் என்பதை கணிக்க வேண்டும்.
முன் தயாரிப்பு ஏன் அவசியம்? குளிர்ந்த நிலையில் இருக்கின்ற நம் உடல் சட்டென்று உடற்பயிற்சிக்கு தயாராக இருக்காது. அப்படியொரு சமயத்தில் பயிற்சி செய்தால் தேவையற்ற காயங்கள் ஏற்படலாம். ஆகவே, நம் உடலை கொஞ்சம் வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதால் நம் இதய நலன் மேம்படும் மற்றும் நுரையீரல் செயல்பாடு பயிற்சிக்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருக்கும்.