ஃபிரிஜ் வாட்டர் குடிப்பது களைப்பை நீக்கலாம் அல்லது அது உங்களின் பழக்கமாகவும் இருக்கலாம். ஆனால் அவ்வாறு குடிப்பதால் உடலுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக பருவ நிலை மாறும் இந்த வேலையில் ஃபிரிஜ் வாட்டர் குடிப்பது கூடுதல் ஆபத்தை உண்டாக்கலாம். அப்படி என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பார்க்கலாம்.
அஜீரணக் கோளாறு : பொதுவாகவே சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்ட பின்னரோ குளுர்ச்சியான தண்ணீர் அல்லது குளிர்பானங்கள் குடிக்கக் கூடாது என்பார்கள். மழை, பனிக் காலமாக இருக்கும் இந்தச் சூழலில் குளிர்ந்த நீர் அருந்துவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். காரணம் நம் உடலுக்கு 37 டிகிரி செல்சியஸ்தான் போதுமான வெப்பநிலை. நீங்கள் குளிர்ந்த நீரை அருந்தி அதைக் குறைத்தால் சமன் செய்ய உடல் மொத்த ஆற்றலையும் அதற்காக செலவழிக்கும். இதனால் உண்ட உணவை செரிமாணிக்க போதுமான ஆற்றல் இல்லாமல் போகும்.
மற்ற காரணங்கள் : நல்ல உடற்பயிற்சிக்குப் பின் குளிர்ச்சியான நீரை அருந்தக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் கடுமையான உடற்பயிற்சியின் போது உடல் அதிகமான வெப்பத்தை வெளியேற்றும். அந்த சமயத்தில் உடனே பொருத்தமற்ற குளிர்ச்சியான நீரை அருந்தும்போது அஜீரணப் பாதையில் கோளாறு ஏற்படும். இதோடு உடல் குளிர்ச்சியான நீரை உறிஞ்சாது என்பதால் குடித்தும் பலனில்லை. இவை தொடர்ந்து தொடர்சியான வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகளை சந்திக்க நேரிடும்.