கோடை காலம் ஏற்கனவே துவங்கி சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் சூரியனின் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு விதமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். கோடைக்காலம் மட்டுமின்றி ஒவ்வொரு பருவநிலைக்குமே நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது போன்ற சூழல்களில் பருவ நிலைக்கு ஏற்றார் போல் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
குறிப்பாக கோடை காலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. ஏனெனில் கோடையில் நிலவும் அதீத வெப்பமானது சர்க்கரை நோயாளிகளை பல்வேறு விதங்களில் பாதிக்க கூடும். ஏனெனில் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நோயாளிகளின் உடல்நிலையில் பாதிக்க வாய்ப்புகள் உண்டு.
இதைப் பற்றி பேசிய மருத்துவர் ஒருவர் கூறுகையில், கோடையில் சூரியனின் வெப்பமானது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். குறிப்பாக இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்களுக்கும் இது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் அதிக வெப்பத்தினால் உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது இவையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும் : கோடை காலங்களில் தினசரி நமது உடலுக்கு தேவையான நீரை அருந்துவது மிகவும் முக்கியமானது. எங்கேயும் வெளியே சென்றாலும் கூட சிறிய அளவிலான தண்ணீர் பாட்டில்களையும், எலக்ட்ரோலைட்டுகளையும் எடுத்து செல்வது மிகவும் உபயோகமாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் ஆவது குடிப்பது அவசியமாகிறது.
இன்சுலின் அளவை பரிசோதிக்க வேண்டும் : சீரான இடைவெளியில் உடலில் உள்ள இன்சுலின் அளவை பரிசோதனை செய்வது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியே சென்றாலும் உங்களுடன் குளுக்கோஸ் போன்றவற்றை எடுத்துச் செல்வது மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவேளை ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் அதனை சரி செய்ய இவை உதவும்.
சூரிய ஒளியிலிருந்து விலகி இருக்கும்: முடிந்த அளவு சூரிய வெப்பத்தில் நேரடியாக வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் எங்கு வெளியே சென்றாலும் வெள்ளை நிற காட்டன் உடைகளை அணிந்து செல்வதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். மேலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதும் அவசியமானது.முடிந்த அளவு சூரிய வெப்பத்தில் நேரடியாக வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் எங்கு வெளியே சென்றாலும் வெள்ளை நிற காட்டன் உடைகளை அணிந்து செல்வதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். மேலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதும் அவசியமானது.