முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

SunFlower Seeds : தினசரி உணவில் கலோரி அளவை குறைக்க நினைப்பவர்கள் சூரிய காந்தி விதைகளை எடுத்துக்கொள்வது நல்லது அல்ல

 • 18

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்களின் விதைகள் போன்ற இயற்கை உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை எவ்வளவு உட்கொண்டாலும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். ஆனால் அது உண்மையானதா?, விதைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் சாறுகள் ஆகியன உடல் நலத்திற்கு நன்மை தருமா? என்பதை பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 28

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனவே என்னதான் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சில உணவுப்பொருட்களை அளவு சரிபார்க்காமல் எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு ஆபத்தாக முடியலாம். குறிப்பாக சூரிய காந்தி விதைகளில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் நலத்திற்கு ஆபத்தானது என ஊட்டசத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  சூரியகாந்தி விதைகளில் உள்ள தயாமின் (வைட்டமின் பி 1) எனப்படும் சக்திவாய்ந்த சாறு உள்ளது, இது உடலில் ஆற்றல் உற்பத்தியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளை உருவாக்குதல், இரத்த பரவுதல் மற்றும் உடலில் முக்கிய சமநிலையை மீட்டெடுப்பது போன்ற செயல்களிலும், இதயபாதிப்பு, நீரழிவு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. ஆனால் இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு பல பிரச்சனைகள் வரக்கூடும். சூரிய காந்தி விதையை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்குமா? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..

  MORE
  GALLERIES

 • 48

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  1. அதிக கலோரிகள்:தினசரி உணவில் கலோரி அளவை குறைக்க நினைப்பவர்கள் சூரிய காந்தி விதைகளை எடுத்துக்கொள்வது நல்லது அல்ல. ஏனெனில் 30 கிராம் வறுக்கப்பட்ட சூரிய காந்தி விதைகளில் 163 கிராம் கலோரிகள் உள்ளன. இதனால் உடல் எடை அதிகரிக்க கூடும் எனவே, சூரிய காந்தி விதைகளை உட்கொள்ளும் முன்பு எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என அறிந்து கொள்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 58

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  2. அதிக காட்மியம் சிறுநீரக சேதத்திற்கு வழிவகுக்கும்: சூரியகாந்தி பூவில் உள்ள காட்மியம் விதைகளில் சேகரிக்கப்படுகிறது. எனவே அதிக அளவில் அதனை உட்கொள்ளும் போது காட்மியத்தின் அளவு அதிகரித்து சிறுநீரகத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கலாம் அல்லது சிறுநீரக செயலிழப்பிற்கு காரணமாக அமையலாம். உங்கள் உணவில் தினமும் 30 கிராம் சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 68

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  3. முகப்பரு பிரச்சனைகள்:ஈரானின் டாப்ரிஸ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி, சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதை கண்காணிக்கவில்லை என்றால், அது முகப்பரு பிரச்சனைகளை உருவாக்குவதோடு, அதனை மோசமடையவும் வழிவகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  4. ஒவ்வாமை: சூரிய காந்தி விதைகளை உட்கொள்வது சிலருக்கு ஒவ்வாமையை கொடுக்கலாம். பொதுவாக வாய் வீக்கம், வாயில் அரிப்பு, புண்கள், தோல் வெடிப்பு, வாந்தி, ஆஸ்துமா போன்ற பல பிரச்சனைகள் சூரிய காந்தி விதைகளை உட்கொள்வதால் ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

  5. குடல் பிரச்சினைகள்: சூரியகாந்தி விதைகளை உட்கொள்ளும் போது அதனுடன் குடலுக்குள் செல்லும் மேல் ஓடுகள், குடலில் அடைப்புகளை ஏற்படுத்தலாம். அவரை செரிமானம் செய்யப்படாமல் மல அடைப்பு மற்று மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  MORE
  GALLERIES