குளிர்ச்சியான உணவுப் பொருளை சாப்பிடும்போது பல் கூச்சம் உண்டாவது ஏன்..? தெரிந்துகொள்ளுங்கள்..!
சிகிச்சை செய்யப்படாத பல்லில் துளை இருக்கும் போது ஜில்லென்று இருக்கும் பொருட்களை சாப்பிடுவதால் பலர் குளிர்ச்சியால் ஏற்படும் கடுமையான பல் வலியை அனுபவிப்பார்கள்.
Web Desk | March 30, 2021, 4:57 PM IST
1/ 10
நம் பற்கள் இயல்பாகவே தட்பவெப்ப நிலைகளை ஏற்று கொள்ளும் வகையில் திறன் பெற்றுள்ளது. இருந்தாலும் சிலருக்கு குளிரில் நிற்கும்போது, வெளியே செல்லும் போது அல்லது கூலிங் நீரை குடிக்கும் போது பற்கூச்சம் அல்லது பல்லில் கடுமையான வலி ஏற்படும். கூலிங் உணவுகள் ஏன் பல் வலியை ஏற்படுத்துகிறது மற்றும் உயர் உணர்திறன் எனப்படும் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி நிலைக்கு ஏன் செல்கிறது இதற்கான வைத்தியம் என்ன என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
2/ 10
போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் பற்கூழின் வெளிப்புற மேற்பரப்பின் ஒரு பகுதியான டென்டினை உருவாக்கும் செல்களின் பற்களின் பற்சிப்பிக்கு அடியில் ஷெல், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அடங்கிய மென்மையான பற்கூழ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய செயல்பாட்டை கண்டறிந்துள்ளனர்.
3/ 10
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மாசசூசெட்ஸ் மற்றும் பொது மருத்துவமனையில் (எம்.ஜி.எச்) ஒருங்கிணைந்த நோயறிதலுக்கான மையத்தின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும், மருத்துவ இயக்குநருமான நோயியல் நிபுணர் ஜோச்சென் லெனெர்ஸ் கூறுகையில், பல்லின் வடிவத்திற்கு சப்போர்ட்டாக இருக்கும் ஓடோன்டோபிளாஸ்ட்களும் பற்கள் குளிர்ச்சியை உணர காரணமாக இருப்பதை ஆய்வின் போது கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
4/ 10
பல் வலியைத் தடுக்க இந்த குளிர் உணர்திறன்(cold sensing function) செயல்பாட்டை சரி செய்யும் முறையையும் இப்போது கண்டறிந்துளோம். குளிர்ச்சி வெளிப்பாட்டினால் ஏற்படும் பல் பிரச்சனைகள் பல காரணங்களால் நிகழ்கிறது. உதாரணமாக சிகிச்சை செய்யப்படாத பல்லில் துளை இருக்கும் போது ஜில்லென்று இருக்கும் பொருட்களை சாப்பிடுவதால் பலர் குளிர்ச்சியால் ஏற்படும் கடுமையான பல் வலியை அனுபவிப்பார்கள். அதே போல வயதானதால் ஏற்படும் ஈறு அரிப்புகளின் காரணமாகவும் பற்கள் குளிர்ச்சியை உணரக்கூடும்.
5/ 10
தவிர பிளாட்டினம் அடிப்படையிலான கீமோதெரபிகளால் சிகிச்சையளிக்கப்பட்ட சில புற்றுநோய் நோயாளிகளின் முழுஉடலும் தீவிர குளிர் உணர்திறன் பெற்றதாக இருக்கிறது. இவர்களுக்கு முகத்தில் படும் லேசான குளிர் காற்று கூட கடுமையான பல் வலியை ஏற்படுத்துகிறது.
6/ 10
பல் வலி தொடர்பான ஆராய்ச்சி கடினமான ஒன்று, இதற்காக பற்களை திறந்து ஆராய வேண்டும் என்பதால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட எலிகள் மீது சோதனைகளை நடத்தியது ஆராய்ச்சி குழு. முந்தைய ஆராய்ச்சியில், TRCP5 மரபணுவால் குறியிடப்பட்ட TRCP5 என்ற புரதத்தை புலனாய்வாளர்கள் குழு கண்டுபிடித்தது. இது உடலின் பல பகுதிகளில் நரம்புகளில் வெளிப்படுகிறது. குளிரால் ஏற்படும் வழியை உணருவதில் TRCP5-ன் முக்கிய பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
7/ 10
காதற்போதைய ஆராய்ச்சிக்கு மரபணு மாற்றப்பட்ட அதாவதுTRCP5 மரபணு இல்லாத எலிகள் ஆராயப்பட்டன. இதில் சேதமடைந்த பற்களை கொண்ட எலிகள் குளிர் கால நிலையிலும், கூலிங் திரவங்களை பருகவும் வைக்கப்பட்டன. ஆனால் அப்போது அவை பெரிதாக வலியை வெளிப்படுத்தவில்லை.
8/ 10
இதனை அடுத்து வெப்பநிலை சென்சார் TRCP5, ஓடோன்டோபிளாஸ்ட் வழியே பற்களின் நரம்புகளுக்கு குளிர்ச்சியை பரப்புகிறது மேலும் வலி மற்றும் குளிர் ஹைபர்சென்சிட்டிவிட்டி ஆகியவற்றை உருவாக்குகிறது என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த குளிர் உணர்திறன் சேதமடைந்த பல்லை கூடுதல் காயத்திலிருந்து பாதுகாக்க உடலின் மொழியாக இருக்கிறது.
9/ 10
பிரித்தெடுக்கப்பட்ட மனித பற்களை ஆய்வு செய்த போது அவற்றில் TRCPS புரதம் இருப்பதை ஜோச்சென் லெனெர்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார். குளிரால் ஏற்படும் பல் உணர்திறனைக் குறைக்க செய்ய வேண்டியவை பற்றி ஆராய்ச்சி குழு கூறியுள்ளது. பல நூற்றாண்டுகளாக பல் வலிக்கு தீர்வாக பயன்படுத்தப்படும் கிராம்பு எண்ணெய் தான் அது. கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜெனோல்( eugenol) TRCP5-ஐ தடுக்கிறது.
10/ 10
யூஜெனோல் கொண்ட பற்பசை ஏற்கனவே விற்பனைக்கு இருந்தாலும் மேற்சொன்ன புற்றுநோய் நோயாளிகள் உட்பட குளிர் காரணமாக மிகவும் சென்சிட்டிவான பல் பிரச்னை ஏற்படும் வாய்ப்புடையவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான சக்தி வாய்ந்த கண்டுபிடிப்புகளுக்கு இந்த் ஆய்வு முடிவு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.