ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது நமது வாழ்க்கையில் நிறைய விஷயங்களை மாற்றும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கும்.

 • 17

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  இன்றைய வேகமான வாழ்க்கைக்கு மத்தியில் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருப்பது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் வேலை, குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை அடைய பல வகையில் முயற்சித்து தோல்வி அடைகிறார்கள். இந்த நிலை தான் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. பெண்கள் உண்மையிலேயே ஆரோக்கியமாக இருக்கிறார்களா மற்றும் உடலையும் மனதையும் உறுதியாக வைத்து கொள்கிறார்களா?

  MORE
  GALLERIES

 • 27

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது நமது வாழ்க்கையில் நிறைய விஷயங்களை மாற்றும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கும். இப்படி ஒரு நிலையை அடைய எளிமையான உணவு பொருள் பெண்களுக்கு உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், தேன் என்கிற மாமருந்து தான் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்த கூடும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

  MORE
  GALLERIES

 • 37

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  பழங்கால மருந்து : மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் மாற்றங்கள், வலி, பதட்டம், மனச்சோர்வு மற்றும் பலவீனம் போன்றவற்றை பெண்கள் சந்திக்கிறார்கள், ஆனால் முந்தைய காலங்களில் பெண்கள் ஏன் மிகவும் வலிமையாக இருந்தார்கள் தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் ‘தேன்’ என்கிற பழங்கால ரகசியம் தான். ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், வலிமையாகவும் இருக்க இது உதவியது. இந்த திரவ தங்கத்தை பெண்கள் தங்களது தினசரி உணவில் சேர்த்து கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  சத்துக்கள் : ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தேன் ஒரு திரவ தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பருவகால காய்ச்சல், ஒவ்வாமை, சளி, தொண்டை புண் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தேன் உதவுகிறது. மேலும் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆன்டி கார்சினோஜெனிக் பண்புகளையும் இது கொண்டுள்ளது. உடலை சிறப்பாகவும் வேகமாகவும் குணப்படுத்த தேனை பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  வலி நிவாரணி : பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முன் அல்லது மாதவிடாயின் போது உடல் வலி, முதுகுவலி அல்லது தலைவலி போன்ற பல அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இதை எளிதில் சமாளிக்க, வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன், ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பருகுவது வலியைக் குணப்படுத்த உதவும். அத்துடன் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இது வழிசெய்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  ஹார்மோன் : பெண்கள் பெரும்பாலும் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்படுகின்றனர், இது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் சமநிலையின்மையின் விளைவாகும்,. இது இனப்பெருக்க செயல்பாட்டை பாதிக்கிறது. எனவே, தினசரி தேனை உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், இது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  வயதாகும் நிகழ்வு : பெண்களுக்கான வலியைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், தேனை உட்கொள்வதால் தோல் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்க இது உதவுகிறது. இதற்கு காலை குடிக்கும் பானங்கள் அல்லது தேநீரில் தேன் சேர்ப்பது சிறந்த வழியாகும். மேலும் தயிர், உளுத்தம்பருப்பு மாவுடன் தேனைக் கலந்து தடவினால், சருமம் பளபளப்பாக மாறும்.

  MORE
  GALLERIES