முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மிதமானது முதல் நீண்டகால பாதிப்பு உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • 18

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    ஐரோப்பிய மண்டலத்தில், பெருந்தொற்று ஏற்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் 17 மில்லியன் மக்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    குறிப்பாக நீண்டகால பாதிப்பு குறித்த ஆய்வு, அதிலிருந்து மீள்வது மற்றும் மறுவாழ்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீண்டகால கொரோனா பாதிப்பு அறிகுறிகள் குறித்த அறிக்கையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு ஆய்வு வெளியிட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    ஐரோப்பியப் பிராந்தியம் குறித்த ஆய்வறிக்கை: ஐரோப்பியப் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பெருந்தொற்று காலத்தின் முதல் 2 ஆண்டுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 உறுப்பு நாடுகளின் 17 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    MORE
    GALLERIES

  • 48

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்: ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பாதிக்கப்படும் அளவு இருமடங்கு கூடுதலாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்குத் தீவிரமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண்ணுக்கும், ஐந்தில் ஒரு ஆணுக்கும் நீண்டகால பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    நீண்ட கால பாதிப்புகள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மிதமானது முதல் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவில் 144 மில்லியன் மக்கள் கொரோனா விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு ஆய்வுகள் மூலமாக இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    அறிகுறிகள்: உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மறதி, குழப்பம் போன்ற மன ரீதியிலான பிரச்சினைகள் ஆகியவை நீண்டகால கொரோனா விளைவுகளின் அறிகுறிகள் ஆகும். சில அறிகுறிகள் அவ்வப்போது வந்து, வந்து போகும். குறிப்பாக மன உளைச்சலிலிருந்து மீள முடியாத நிலை ஏற்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    கொரோனாவுடன் தொடர்புடைய பிற விளைவுகள் : முடி உதிர்தல், காதுகளில் இரைச்சல், செரிமான பிரச்சனைகள் போன்றவை நீண்டகால விளைவுகள் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களிலிருந்து இந்த அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. மக்களில் சிலருக்குச் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 88

    பெண்களுக்கு நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

    உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்: ஐரோப்பியப் பிராந்தியத்தில் நீண்ட கால பாதிப்புகளைக் கண்டறிவது, அது தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்வது, ஆய்வு செய்வது, அறிக்கை சமர்ப்பிப்பது, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

    MORE
    GALLERIES