ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் புற்றுநோயால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இறப்பின் காரணத்துக்கான பட்டியலில், இரண்டாவது காரணமாக புற்றுநோய் தான் இருக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழ் மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பத்து இறப்பில் ஏழு நபர்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ஏற்படும் இந்த இறப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வாழ்க்கை முறை மாற்றங்கள், வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் மூலம் தடுக்கப்படுகின்றன.
வாழ்க்கைமுறை மாற்றம், முறையான மருத்துவ பரிசோதனை, ஆரம்ப காலத்தில் நோயை கண்டறிவது, மற்றும் உரிய சிகிச்சை ஆகியவற்றின் மூலமாக தடுக்க முடியும் என்பது முக்கியமானது. எனவே உலகம் முழுவதிலும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது, ஆபத்தான புற்றுநோய் வகைகள், புற்றுநோய் அறிகுறிகள், சிகிச்சைகள், ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலக புற்று நோய் தினம் 2022 முதல் 2024 வரையில் ஒரே கருப்பொருளாக, ‘close the care gap’ என்ற தீமின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, யாருக்கும் புற்றுநோய்க்கான சோதனைகள் செய்ய வசதி, சிகிச்சை, உள்ளிட்டவை கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய, இடைவெளியை தவிர்ப்பதற்காக இந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கேன்சர் தினம் – வரலாறு : உலக புற்று நோய் தினம் முதன் முதலாக பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிராக எப்படி எல்லாம் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய மூன்றைப் பற்றியும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுவதற்காக இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் கண்டறியப்படும் பெரும்பாலான புற்றுநோய்களை சிகிச்சை மூலம் முழுவதுமாக குணப்படுத்த முடியும், இறப்பு விகிதத்தை தடுக்க முடியும். மேலும் இந்த புற்றுநோய் தினத்தில் நடக்கும் நிகழ்வுகள் வழியாக உலகம் முழுவதிலுமே பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தனிநபர், அரசாங்கம், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.