முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

பல ஆண்களுக்கு விந்தணு சார்ந்த பிரச்சினைகளால் குழந்தை பெறுவதில் சிரமம் உண்டாகும். குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது தரம் கண்டறியப்படுவதன் மூலம் இந்த பாதிப்பை அறிந்து கொண்டு சிகிச்சை பெறலாம்.

 • 18

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  கருவுறுதல் என்பது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் கடினமாக மாறி வருகிறது. இருப்பினும், கருவுறாமைக்கு எளிய மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியும். குறிப்பாக, IVF போன்ற சிகிச்சை முறைகள் கருவுறுதலுக்கு பெரிதும் உதவியாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 28

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  மேலும், இந்த சிகிச்சையை பொறுத்த வரையில் இதற்கான சோதனை முடிவுகள், தம்பதியினர் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் நேரம், தம்பதியரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் தம்பதிகளின் தேர்வு ஆகியவற்றை பொறுத்ததாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 38

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  உங்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் அல்லது கருவுறாமை பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுதல் நல்லது. மேலும் குறிப்பிட்ட சோதனைகள் மற்றும் மருந்துகளின் மூலம் பொருத்தமான சிகிச்சையை வழங்க முடியும். மேலும், மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகளை பெரும்பாலும் எளிய மருந்துகளால் குணப்படுத்த முடியும். பொதுவாக எந்த நேரத்தில் கருவுறுதல் நிபுணரைப் பார்ப்பது என்று பலருக்கு தெரிவது இல்லை. எனவே, ஒரு கருவுறுதல் நிபுணரை எப்போது சந்திக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 48

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  பிசிஓஎஸ் (PCOS) : உங்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) இருப்பதாக நீங்கள் நினைத்தால் அவசியம் மருத்துவரை பார்க்கலாம். இது பெண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஒரு ஹார்மோன் சார்ந்த பாதிப்பாகும். இது ஒரு பெண்ணின் சீரான இடைவெளியில் வரக்கூடிய மாதவிடாய் திறனை பாதிக்கிறது. ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து கருமுட்டை வெளிவரவில்லை என்றால், அது ஒழுங்கற்ற மாதவிடாய் என்று அர்த்தம். இதனால் அவர் கர்ப்பமாவது கடினமாக இருக்கலாம். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் கருத்தரிப்பதற்கு உதவும் மாத்திரைகள் அல்லது ஊசி மூலம் பிசிஓஎஸ் பாதிப்பை குணப்படுத்தலாம்.எனவே, உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது நல்லது.

  MORE
  GALLERIES

 • 58

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) :  எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையில் பொதுவாக வரிசையாக இருக்கும் திசுக்கள் கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் போன்ற பிற இடங்களில் வளரும் போது ஏற்படும் ஒரு பாதிப்பாகும். வலிமிகுந்த மாதவிடாய், மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் லேசான ரத்தப்போக்கு மற்றும் வலிமிகுந்த உடலுறவுக்கும் கூட வழிவகுக்கும். இந்த பாதிப்பு உங்களுக்கு இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  தைராய்டு : எட்டு பெண்களில் ஒருவருக்கு வாழ்நாளில் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்களில் 60% பேருக்கு அவர்களின் நிலை குறித்து தெரிவதில்லை. மிகவும் பொதுவான தைராய்டு கோளாறுகளில் ஒன்று ஹைப்போ தைராய்டிசம் ஆகும். தைராய்டு ஹார்மோனின் குறைந்த அளவு அல்லது அதிக TSH ஹார்மோனானது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். இந்த நிலைமைகள் எளிமையான மருந்துகளால் குணப்படுத்த முடியும். எனவே, சரியான நேரத்தில் ஒரு கருவுறுதல் நிபுணரை அணுகுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 78

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  அதிக வயது : நீங்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், கர்ப்பம் தரிக்க முயற்சிப்பவராகவும் இருந்தால், கருவுறுதல் நிபுணரைப் பார்ப்பது எப்போதும் நல்லது. 35 வயதிற்குப் பிறகு கருமுட்டை சுழற்சி வெகுவாகக் குறைகிறது. உங்கள் கருவுறுதல் நிபுணர் உங்கள் கருமுட்டை இருப்பைச் சரிபார்த்து அதற்கேற்ப வழிகாட்டுவார். நீங்கள் 35 வயதிற்குக் குறைவாக இருந்தால், நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக முயற்சி செய்தும் கர்ப்பமாகவில்லை என்றால், அது குறித்து கருவுறுதல் நிபுணரிடம் கருத்து கேட்பது சிறந்தது.

  MORE
  GALLERIES

 • 88

  கருவுற நினைக்கும் பெண்களே..உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் மகப்பேறு மருத்துவரை சந்திப்பது அவசியம்..!

  விந்தணுக்கள் : பல ஆண்களுக்கு விந்தணு சார்ந்த பிரச்சினைகளால் குழந்தை பெறுவதில் சிரமம் உண்டாகும். குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது தரம் கண்டறியப்படுவதன் மூலம் இந்த பாதிப்பை அறிந்து கொண்டு சிகிச்சை பெறலாம். அதே போன்று, முதுமை காலம் என்பது பெண்களின் கருமுட்டையின் தரத்துடன் அதன் உற்பத்தியையும் பாதிக்கிறது. கருமுட்டையின் தரம் அல்லது கருமுட்டை எண்ணிக்கை குறைவது பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த பாதிப்புகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

  MORE
  GALLERIES