முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

ADHD பிரச்சனை உள்ள நபர்கள் தகவல் தொடர்பில் சிக்கல், உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிக்கல் மற்றும் கவனகுறைவு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள்.

  • 19

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD அல்லது அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபராக்டிவிட்டி டிஸார்டர் (Attention Deficit Hyperactivity Disorder) என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரையும் பாதிக்கும் ஒரு நரம்பியல் வளர்ச்சி கோளாறு ஆகும்.

    MORE
    GALLERIES

  • 29

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD கோளாறு ரிலேஷன்ஷிப் மற்றும் பாலியல் நடத்தை உட்பட வாழ்வின் பல அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக கோபம் மற்றும் தனிமை ஆகியவை செக்ஸ் அல்லது காதல் உறவுகளில் ஆர்வ குறைவை உண்டாக்குகிறது. அந்த வகையில் ADHD கோளாறு ஒருவரை கோபமாக அல்லது தனிமையாக உணர வைக்கும்.

    MORE
    GALLERIES

  • 39

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD பிரச்சனை உள்ள நபர்கள் தகவல் தொடர்பில் சிக்கல், உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிக்கல் மற்றும் கவனகுறைவு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். இந்த சிக்கல்கள் அனைத்தும் அவர்களின் துணையுடனான உறவின் போது பாலியல் நடத்தையை பாதிக்கலாம். ஒருவரது பாலியல் வாழ்க்கையை ADHD எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 49

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD சிக்கல் உள்ள நபர்கள் பாலியல் செயல்பாடுகளின் போது துணையுடன் மகிழ்ச்சியாக உறவு கொள்வதில் கவனம் செலுத்துவது சவாலாக இருக்கலாம். அதாவது உடலுறவின் போது கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதன் காரணமாக உறவின் போது விறைப்பை அல்லது உணர்வை தக்க வைத்து செக்ஸில் உச்சநிலை அடைவதை கடினமாக்குகிறது. மேலும் இந்த கவனச்சிதறல் அவர்களின் பாலியல் தேவைகள் மற்றும் ஆசைகள் பற்றி அவர்களின் துணையுடன் திறம்பட தொடர்பு கொள்ளும் திறனையும் பாதிக்கலாம். இந்த பாதிப்பை கொண்டவருக்கு இது சாதாரணமாக தோன்றினாலும், அவரது துணைக்கு செக்ஸில் ஆர்வமில்லாத ஒருவருடன் உறவு கொள்ளும் மனநிலையை ஏற்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    பின்விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் அல்லது சிந்திக்காமல் செயல்படும் நடத்தை மனக்கிளர்ச்சி (Impulsivity) என குறிப்பிடப்படுகிறது. ADHD பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் பொதுவான குணமாக Impulsivity இருக்கிறது. மேலும் இது ஒருவரின் பாலியல் நடத்தையையும் பாதிக்க கூடும். ஏனென்றால் ADHD உள்ள நபர்கள் பல பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்வது அல்லது ஆபத்தான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற ஆபத்தான பாலியல் நடத்தையில் ஈடுபட கூடும்.

    MORE
    GALLERIES

  • 69

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    பாலியல் நடத்தையில் ADHD-ன் மற்றொரு சாத்தியமான தாக்கம் ஹைப்பர்செக்சுவாலிட்டி (Hypersexuality) அல்லது பாலியல் செயல்பாட்டில் அதிக ஆர்வம். இது பாலியல் செயல்பாட்டிற்கான அதிக ஆசைக்கு வழிவகுத்து உறவில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 79

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இது உறவில் பாலியல் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அவர்களின் திறனை பாதிக்கும். இது ADHD உள்ளவருக்கும் அவரது பார்ட்னருக்கும் இடையே விரக்தி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 89

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD பாதிப்பிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகள் ரிலேஷன்ஷிப்பில் உள்ள நபர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்தலாம். libido குறைவு அல்லது உடலுறவின் போது உச்சக்கட்டம் அடைவதில் சிரமம் போன்ற ஒருவரின் பாலியல் நடத்தையை பாதிக்கும் பக்க விளைவுகளை ADHD-க்கான மருந்துகள் ஏற்படுத்த கூடும்.

    MORE
    GALLERIES

  • 99

    அதிக கோபம்.. தனிமையை விரும்புகிறீர்களா..? உங்களுக்கு ADHD பிரச்சனை இருக்கலாம்..!

    ADHD என்பது ஒரு நியூராலஜிக்கல் கண்டிஷன் தானே தவிர ஆளுமை குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து பாலியல் உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். துணையுடன் திறந்த மற்றும் நேர்மையான தொடர்பை பேணுவதும், தேவைகள் மற்றும் கவலைகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மிக முக்கியம். ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு நிபுணர்களின் உதவியை நாடுவது உள்ளிட்டவை ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் ADHD-ஆல் எதிர்கொள்ளும் அறிகுறிகளை நிர்வகிக்க கூடுதல் உத்திகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகளை வழங்கும்.

    MORE
    GALLERIES