இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது பலருக்கும் சவால் மிகுந்த காரியமாக இருக்கிறது. அதிக உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க பல விதமான உத்திகளை மக்கள் கையாள தொடங்குகின்றனர்.
பேலியோ டயட், கீடோ டயட் என பல விதமான டயட் முறைகளை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் 80-20 என்ற டயட் முறை குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதென்ன 80க்கு 20 என்று தோன்றுகிறதா? 80 சதவீத சமயங்களில் ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். மீதமுள்ள 20 சதவீத சமயங்களில் உங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடலாம்.
80க்கு 20 டயட் முறையானது உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். இந்தத் திட்டத்தில் மிகத் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பது ஆறுதலான விஷயம். உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டு சீரான உணவுகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதனால் கீழ்காணும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.