“உப்பு இல்லா பண்டம் குப்பையில்” என்பார்கள். அதே சமயம் உப்பு அதிகமான பண்டங்களையும் சாப்பிட முடியாது. நாம் இயல்பாக சமைக்கும் உணவின் சுவையை அதிகரிக்க உப்பு சேர்க்கிறோம். சுவைக்கு மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உப்பு பெரிதும் உதவியாக உள்ளது. எனினும், இந்த உப்பு உணவில் அதிகமானால் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.